மதுரை, ஜூலை 23- மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளர் சே,முனியசாமி தன் பகுதியில் பல்வேறு பள்ளிகளில் படிக்கும் 250 மாணவ, மாணவி களுக்கு தந்தை பெரியார் படம் முன் அட்டையிலும், ஆசிரியர் அவர்களின் படம் பின் அட்டையிலும் அச்சிடப் பட்டிருக்கும் நோட்டுப் புத்தகங் களை வழங்கினார்.
அவரது எஸ்.எம். மகாலில் 14.06.2026 மாலை 4 மணியளவில் நோட்டுப்புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ம்துரை மாநகர் மாவட்டக் கழகத் தலைவர் பழக்கடை அ.முரு கானந்தம் தலைமை ஏற்றார். கல்வி எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி சே.முனியசாமி எடுத்துரைத்தார். மாணவ மாணவிகளிடம் கேள்வி பதில் முறையில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தலைவர் முனைவர் வா.நேரு உரையாற்றினார்.
பின்னர் மாணவ மாணவி களுக்கு நோட்டுப் புத்தகம் வழங் கப்பட்டது. கழகத் தலைமை செயற்குழு உறுப்பினர் வே.செல் வம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை.துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் இராம.வைரமுத்து, பொறியியல் மாணவர் பெரியார் செல்வம், வழக்குரைஞர் அருண்குமார் ஆகியோர் நோட்டுப் புத்தகங்களை வழங்கினர்.மிக ஆர்வமாக மாணவ மாணவிகள் நோட்டுப் புத்தங்களை வாங்கிச்சென்றனர்.
