மதுரையில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கும் விழா

மதுரை, ஜூலை 23- மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளர் சே,முனியசாமி தன் பகுதியில் பல்வேறு பள்ளிகளில் படிக்கும்  250 மாணவ, மாணவி களுக்கு தந்தை பெரியார் படம் முன் அட்டையிலும், ஆசிரியர் அவர்களின் படம் பின் அட்டையிலும் அச்சிடப் பட்டிருக்கும் நோட்டுப் புத்தகங் களை வழங்கினார்.

அவரது எஸ்.எம். மகாலில் 14.06.2026 மாலை 4 மணியளவில் நோட்டுப்புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு  ம்துரை மாநகர் மாவட்டக் கழகத் தலைவர் பழக்கடை அ.முரு கானந்தம் தலைமை ஏற்றார். கல்வி எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி சே.முனியசாமி எடுத்துரைத்தார். மாணவ மாணவிகளிடம் கேள்வி பதில் முறையில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தலைவர் முனைவர் வா.நேரு உரையாற்றினார்.

பின்னர் மாணவ மாணவி களுக்கு நோட்டுப் புத்தகம் வழங் கப்பட்டது. கழகத் தலைமை செயற்குழு உறுப்பினர் வே.செல் வம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை.துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் இராம.வைரமுத்து, பொறியியல் மாணவர் பெரியார் செல்வம், வழக்குரைஞர் அருண்குமார் ஆகியோர் நோட்டுப் புத்தகங்களை வழங்கினர்.மிக ஆர்வமாக மாணவ மாணவிகள் நோட்டுப் புத்தங்களை வாங்கிச்சென்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *