மாநகராட்சிப் பணிகள் சுணக்கமின்றி செயல்பட த.வெ.க. அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயார்! சென்னை துணை மேயர் மு.மகேஷ்குமார் உறுதி

சென்னை, ஜூன் 23–-  தவெக தலைமையிலான அரசுக்கு சென்னை மாநகராட்சி முழு ஒத்துழைப்பு அளிக்கும் என துணை மேயர் மு.மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

துணை மேயர் பேட்டி

சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று முன்தினம் (21.6.2026) செய்தியாளர்களை சந்தித்த துணை மேயர் மு.மகேஷ்குமார் கூறியதாவது:

“தமிழ்நாடு மக்கள் புதிய அரசை தேர்ந்தெடுத் துள்ளனர். மக்களின் தீர்ப்பை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம். சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த தவெக அரசுக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளோம்.

மாநகராட்சியின் அன்றாட பணிகள், குடிநீர் விநியோகம், சாலை பராமரிப்பு, தூய்மைப் பணி போன்ற அடிப்படை சேவைகளில் எந்தவித சுணக்கமும் இன்றி அரசுடன் இணைந்து செயல்படுவோம். ஆட்சி மாற்றம் என்பது மக்களுக்கான சேவையில் தொய்வை ஏற்படுத்திவிடக் கூடாது.” என்றார்.

அரசியல் சூழல்

அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தவெக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது. இந்த பின்னணியில், சென்னை மாநகராட்சியை திமுக கட்டுப் பாட்டில் வைத்துள்ள நிலையில், துணை மேயரின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

“அரசியல் வேறுபாடுகளை கடந்து, சென்னை மக்களின் வளர்ச்சிக்காக இணைந்து பணியாற்றுவதே எங்கள் நோக்கம்.

புதிய அரசு கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை மாநகராட்சி மூலம் விரைந்து செயல் படுத்த அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்படும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *