பசுமை எரிசக்தி வளர்ச்சியை வலுப்படுத்த புதுப்பிக்கத்தக்க 5 எரிசக்தி மண்டலங்கள் மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தகவல்

2 Min Read

சென்னை, ஜூன் 21- தமிழ் நாட்டில் பசுமை எரிசக்தி வளர்ச்சியை வலுப்படுத்த புதிதாக 5 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ள தாக மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மறுசீரமைப்பு நடவடிக்கை

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் நிர்வாக செயல்திறனை மேம்படுத்தவும், முதலீட்டாளர்கள், பொதுமக்களுக்கு விரைவான, வெளிப்படையான சேவைகளை வழங்கவும் நிர்வாக மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, காற்றாலை, சூரிய மின்சக்தி திட்டங்களின் செயல்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கில், ஏற்கெனவே இயக்கத்தில் இருந்த உடுமலைப்பேட்டை, திருநெல்வேலி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வட்ட அலுவலகங்களின் நிர்வாக அமைப்பு கைவிடப்பட்டு மறுசீரமைக்க முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, சென்னை, திருச்சி, நெல்லை, கோவை, மதுரை ஆகிய இடங்களை தலைமையிடமாகக் கொண்டு 5 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்கள் உருவாக் கப்பட்டு, காற்றாலை, சூரிய மின்சக்தி திட்டங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து விரைவுபடுத்த நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட் டுள்ளது.

அந்த வகையில், நெல்லை, கோவை, சென்னை மண்டலத்தில் சென்னை, காஞ்சி, வேலூர், திருவண்ணாமலை, திருச்சி மண்டலத்தில் திருச்சி, விழுப்புரம், தஞ்சை, மதுரை மண்டலத்தில் மதுரை, கரூர், ஈரோடு ஆகிய மின்பகிர்மான மண்டலங்களில் உள்ள காற்றாலை, சூரிய மின் சக்தி திட்டங்களை ஒருங் கிணைத்து செயல்படுத்தும் வகையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் நிர்வாகம், கண்காணிப்பு, செயல்பாட்டு பணிகள் உதவி செயற்பொறி யாளர்களின் தலைமையில் மேற்கொள்ளப்படும்.

இவற்றின் செயல்பாட்டை வலுப்படுத்த தலைமையகத்தில் தனித் திட்ட அமலாக்கம், கண்காணிப்புக்கான கூடுதல் பொறுப்புகளும் சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு அனுமதி வழங்குதல், மின்உற்பத்தியை வெளியேற்றத் தேவையான உள்கட்டமைப்பு ஒருங்கிணைப்பு, முதலீட்டாளர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் வெளிப்படையான சேவை வழங்குதல் போன்றவை அதிக செயல்திறனுடன் மேற் கொள்ளப்படும்.

பொதுமக்கள், முதலீட்டாளர் களுக்கு கூடுதல் பயனாக காற்றாலை, சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் காலம் குறைக்கப்பட்டு, திட்ட செயல்பாடுகள் விரைவுபடுத்தப் பட்டு முதலீட்டாளர்கள், மின் உற்பத்தியாளர்களுக்கு ஒருங்கிணைந்த சேவை வழங்குவதன் மூலமாக பசுமை மின்சார உற்பத்தி திறன் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *