ரிசார்ட் அரசியல் செய்யாத ஒரே இயக்கம் தி.மு.க.! உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை, மே 26- தமிழ்நாட்டில் ‘ரிசார்ட் அரசியல்’ செய்யாத ஒரே இயக்கம் திமுக மட்டும்தான் என்று திமுக இளைஞரணி செய லாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், திமுகவிற்கும் எதிர்க் கட்சிகளுக்கும் இடையே உள்ள அரசியல் நாகரிக வித்தியாசத்தை சுட்டிக் காட்டினார். நமக்கும் அவர்களுக்குமான வித்தியாசம் இதுதான்!

அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது:

“தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில், திமுகவினர் அனைவரும் சென்னைக்கு வருவதற்காக ரயில் மற்றும் பேருந்து பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்து கொண்டிருந்தனர்.

ஆனால், தற்போதைய ஆளுங்கட்சியாக இருந்தவர்கள் (அதிமுக), தங்களது சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நம்பிக்கை இல்லாததால் அவர்கள் ஓடிவிடக் கூடாது என்று ரிசார்ட்டு களை (Resort) புக் செய்து கொண்டிருந்தார்கள். இதுதான் நமக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள மாபெரும் வித்தியாசம்.”

தொண்டர்களின் இயக்கம் தி.மு.க.

மேலும், திமுக என்றும் மக்கள் மீதும், தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் முழு நம்பிக்கை கொண்ட ஒரு இயக்கம் என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டு அரசியலில் தங்களை எப்போதும் தனித் துவமான ஒரு இயக்கமாக நிலைநிறுத்திக் கொள்வதில் திமுக பெருமிதம் கொள்கிறது என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *