சென்னை, ஜூன் 21 தமிழ்நாடு அரசின் திரைப்படம் & தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் ஒரு பெண் உறுப்பினர் கூட நிய மிக்கப்படவில்லை என கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். பல சவால்களைக் கடந்து திரைத்துறையில் கலைஞர்களாக, தொழில்நுட்ப வல்லுநர்களாக பணியாற்றி வரும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். அவர்க ளுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
