சென்னை, ஜூன் 17 குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ள நிலையில் நான் 6 மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இல்லை திமுகவின் பெரும் போராட் டத்தை எதிர் பார்க்கிறீர்களா? என முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
குழந்தைகள் பாதுகாப்பு
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு: திறன்மிக்க அதிகாரிகளை நியமித்துவிட்டேன். சிங்கப்பெண் படையை அமைத்து விட்டேன் என்று சீறிய முதலமைச் சரின் காதுகளுக்கு இந்தச் செய்தி களைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்க வில்லையா? மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு ‘கால்ஷீட்’ எப்போது? சவாலும், சவடாலும் விட்டவர், எப்போது அமைதி நிலையில் இருந்து வெளியே வருவார்? மக்களின் உயிரும், குழந்தை களின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகி உள்ள நிலையிலும், நான் 6 மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இல்லை, திமுகவின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளி யிட்ட பதிவில், “24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன. நீங்கள் நியமனம் செய்ததாக சொன்ன திறன்மிக்க அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் முதலமைச்சரே? பாலியல் வன்கொ டுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந் தைகளை பெற்றவர்களுக்குத் தெரி யாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி” என தெரிவித்துள்ளார்.
