ஈரான், லெபனானுக்குப் புதிய மனிதநேய உதவிகள் சீனா அறிவிப்பு

பெய்ஜிங், ஜூன் 20- அமெரிக்கா, இஸ்ரேலுடனான போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான், லெபனான் நாடுகளுக்கு மீண்டும் மனிதநேய உதவிகளை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது.

ஈரான், லெபனான் மக்களின் மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளுக்காக மிக விரைவில் புதிய மனிதநேய உதவிப் பொருள்கள் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாா்ச் மாதமும், ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா அவசரகால மனிதநேய உதவிகளை வழங்கியிருந்தது.

ரஷ்யா: தொழில்நுட்பக் கோளாறால்

விழுந்து நொறுங்கிய போர் விமானம்
4 வீரர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்!

மாஸ்கோ, ஜூன் 20- ரஷ்யாவின் அதிநவீன ‘Tu-22M3’ ரக உத்திசார் குண்டுவீச்சு விமானம் (Strategic Bomber) ஒன்று சைபீரியாவின் இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் நேற்று வழக்கமான பயிற்சிப் பறப்பில் ஈடுபட்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து, செங்குத்தாகத் தலைகீழாகத் தரையில் பாய்ந்து விழுந்து பயங்கரமாக நொறுங்கியது. விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளான அடுத்த கணமே, அந்த இடத்திலிருந்து பயங்கர கரும்புகை வானுயர எழும்பியது. இந்த விபத்து அங்காரா நதிக்கு அருகில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் நடந்துள்ளது. இதுகுறித்த அதிர்ச்சியூட்டும் காட்சிப் பதிவுகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகின்றன.

விமானம் தரையில் மோதுவதற்கு சில நொடிகள் மட்டுமே இருந்த நிலையில், அதில் இருந்த 4 ராணுவ வீரர்களும் சமயோசிதமாகச் செயல்பட்டனர். அவசரகால தொழில்நுட்பம்: விமானத்தில் உள்ள அவசரகால இருக்கை வெளியேற்ற தொழில்நுட்பம் (Ejection Seat) மூலம் அவர்கள் நால்வரும் விமானத்திலிருந்து பத்திரமாக வெளியே குதித்தனர்.

அமைச்சகம் விளக்கம்: “விபத்தில் சிக்கிய 4 வீரர்களும் பாதுகாப்பாக உயிர் தப்பியுள் ளனர். அவர்களின் உயிருக்கோ அல்லது ஆரோக்கியத் திற்கோ எந்தவித ஆபத்தும் இல்லை” என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்த விபத்துக்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து ரஷ்ய ராணுவ அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பன்னாட்டு கடல் சட்ட தீர்ப்பாய
நீதிபதியாக இந்தியர் தேர்வு

நியூயார்க், ஜூன் 20- அய்.நா. சபைக்கான இந்திய தூதரகம் நேற்று (19.6.2026) வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: நியூயார்க்கில் நடைபெற்ற தேர்தலில், பன்னாட்டு கடல் சட்ட தீர்ப்பாயத்தின் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிமல் படேலுக்கு வாழ்த்துகள். அவரது இந்தத் தேர்வு, கடல் சட்டங்கள் மீதான இந்தியாவின் நீண்டகால அர்ப்பணிப்பை காட்டுகிறது. அவருக்கு ஆதரவு அளித்த நாடுகளுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளது.

பிமல் படேல் தற்போது அய்.நா. பன்னாட்டு சட்ட ஆணையத்தின் உறுப்பினராகவும் ராஷ்டிரிய ரக் ஷா பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பொது பன்னாட்டு சட்டப் பேராசிரியராகவும் உள்ளார். மேலும் பிரதமர் அலுவலகத்தின் கீழ் செயல்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *