
தஞ்சாவூர் குடும்ப விளக்கு தலைமை நிர்வாகி பா.வேணுகோபால், பா.செல்வம்(எ)செல்வகுமார் (ஒட்டுநர் அரசுபோக்குவரத்து கழகம், டீலக்ஸ்) ஆகியோரின் தந்தையார் தஞ்சை பள்ளியக்ரஹாரம் வி.பார்த்தசாரதி நேற்று (15.6.2026) மறைவுற்றார். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் இன்று (16.6.2026) காலை அவரது உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினார். வேணுகோபால் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தலைமை கழகத்தின் சார்பில் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார். உடன்: தஞ்சாவூர் மாவட்டக் காப்பாளர் அய்யனார், தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் அமர்சிங், டேவிட், வீரக்குமார் மற்றும் தோழர்கள்.
