திருவண்ணாமலை, ஜூன். 15- திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாதுமலையில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் நிரந்தர தலைமையாசிரியர்கள் நியமிக்கக் கோரி பழங்குடியின மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் பட்டறைக்காடு, கோவிலாண்டூர், சேராமரத்தூர் உள்பட சுமார் 23 தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகள் இயங்கிவருகிறது. பெரும்பான்மை பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இல்லாத நிலையில் பொறுப்புத் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.
இதனால் தலைமை ஆசிரியர் பணியை மட்டுமே செயல்படுத்தமுடிகிறது. மலைவாழ் மக்களின் கல்வி தரம் பாதிக்கப்படுகிறது. மேலும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் முதுகலைபட்டதாரிஆசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமிக்காமல் தொகுப்பூதிய ஆசிரியர்கள் நியமிப்பதால் இதில் மாணவர்களின் கல்வி திறனை வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் தனிக்கவனம் செலுத்தி குழந்தைகள்பெற்றோர்களுக்குக் கல்விநலன்குறித்த விழிப்புணர்வை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும். மேலும் பழங்குடியினர் நலத்துறையும் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் தொடர்ந்து கல்விதிறன் வளர்க்க மலைவாழ் மக்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் ஆகியோர் அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள், நிரந்தர தலைமை ஆசிரியர்கள், நியமிக்க விரைவான நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்பதே மலைவாழ் மக்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மலைவாழ் மக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.
