ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட திராவிடர் கழக மேனாள் மாவட்ட செயலாளர் ம.நடராசன் (வயது 78) உடல் நலக் குறைவு காரணமாக மதுரையில் அவரது இல்லத்தில் முடிவெய்தினார். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், ஆசிரியர் ஆகியோரிடம் மிகுந்த பற்றுதலாக இருந்த அவருக்கு பரமேஸ்வரி என்ற துணைவியாரும், கனிமொழி, மணியம்மை, நாகம்மை என்ற மூன்று மகள்களும் உள்ளனர். அவருடைய இறுதி நிகழ்வு நேற்று (13.6.2026) மாலை 6 மணியளவில் நடைபெற்றது.
