சேலம் தாதகாப்பட்டியில் நடைபெற்ற “திராவிடர் எழுச்சி நாள்”

சேலம், ஜூன் 14- சேலம் தாதகாப்பட்டி கேட்டில் தாய்க் கழகமாம் திராவிடர் கழக சார்பில் “திராவிடர் எழுச்சி நாள்”என முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா ஆசிரியர் அவர்களின் அறிக்கைக்கு இணங்க பொது கூட்டம் 10-06-2026 புதன்கிழமை மாலை 6:30 மணி அளவில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜூ தலைமை ஏற்று உரையாற்றினார். சேலம் மாநகரச் செயலாளர் அ.வெ. இராவண பூபதி வரவேற்றுப் பேசினார். கூட்டத்தை சேலம் மாவட்டச் செயலாளர் மூனாங்கரடு பெ. சரவணன் அவர்கள் ஒருங்கிணைத்தார்.

மாவட்டத் துணைத் தலைவர் சு. இமயவரம்பன், வீரபாண்டி ஒன்றிய கழகத் தலைவர் ஜெ. காளியப்பன் அயோத்தியாப் பட்டணம் ஒன்றிய கழக தலைவர் டாக்டர் என். ராஜேந்திரன், சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் வழக்குரைஞர் ச.சுரேஷ்குமார், திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழு உறுப்பினர் ச.சுப்பிரமணி, மாநகர பொருளாளர் எம்.செரீப், கருங்கல் பட்டி பகுதிச் செயலாளர் ஏ.எஸ். சரவணன், கொண்டலாம்பட்டி பகுதிச் செயலாளர் ஆர்.பி.முருகன், கொண்டலாம்பட்டி மண்டலத் தலைவர் எம்.அசோகன், குகைப் பகுதிச் செயலாளர் எஸ்.ஜெகதீஸ், சேலம் மாவட்ட மாநகர அமைப்பாளர்கள் ஓடெக்ஸ் எம்.ஏ.இளங்கோவன், இரா சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுகவின் இளம் பேச்சாளர் யுவராஜ் ஜெகன் என்கிற ஜெகநாதன் ஏ.எஸ்.சரவணன், கருங்கல்பட்டி பகுதி செயலாளர் எம்.செரீப் மாநகரப் பொருளாளர் ஆகியோர் கலைஞர் அவர்கள் ஆற்றிய அரும்பணியைப் பற்றி விவரித்து பேசினார்கள்.

சிறப்புரையாற்றிய கழகப் பேச்சாளர் இராம. அன்பழகன் தனது உரையில், கலைஞர் ஆட்சியில் மக்களுக்கு செய்த அரிய பணிகளை நகைச்சுவையுடன் எடுத்துக் கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு திமுகவைச் சேர்ந்த அப்பாபு புவனேசுவரி, திராவிட முன்னேற்றக் கழக வார்டு செயலாளர்கள் எஸ்.ரங்கசாமி, கே.ஞானசேகர், மா.சீனிவாசன், ஆர்கோபால், எஸ்.எஸ்.பழனிசாமி மற்றும் திராவிடர் கழகத் தோழர்கள் பழ. பரமசிவம், பேங்க் ராஜூ, மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், மகளிர் பாசறை மாவட்டச் செயலாளர் ச.கனிமொழி, மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்  ரை. சக்திவேல் மற்றும் அதிகளவில் பொதுமக்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்தார்கள்.

இறுதியில் சேலம் மாநகரத் தலைவர் அரங்க இளவரசன் நன்றியுரை கூற கூட்டம் இனிதே முடிந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *