லிடியன் இயற்றியுள்ள சிம்பொனி – சாதனைக்கு வாழ்த்துகள்! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

1 Min Read

சென்னை, ஜூன் 13– குறளிசைக் காவியம் படைத்து சாதனை புரிந்த லிடியன் இப்போது லண்டனில் சிம்பொனி இயற்றி சாதித்துள்ளார். திறமைமிகு இளைஞனுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

லண்டன் சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவின் 92 உலகத்தரம் வாய்ந்த இசைக்கலைஞர்கள் மற்றும் அவர்களது இசைக் கருவிகளைக் கொண்டு தனது முதல் சிம்பொனி ஆல்பமான ‘‘SymphonyNo.1 – New Beginnings”–அய் வெற்றிகரமாக இசையமைத்து, பதிவு செய்து முடித்துள்ள, இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் அவர்களை, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் சந்தித்து வாழ்த்தினார். அப்போது தி.மு,கழக துணைப் பொதுச் செயலாளர் – நாடாளுமன்ற  தி.மு.க. குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி அவர்கள் உடனிருந்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு:–

“#குறளிசைக்காவியம் படைத்துச் சாதனை படைத்த நமது @lydian_official, இப்போது #Symphony இயற்றியுள்ளார்!

வாழ்த்துகள்இந்த இளைஞனுக்கு– -– சாதனைகள் இன்னும் பல படைக்கவிருக்கும் திறமைமிகு கலைஞனுக்கு!”

இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *