தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்ததன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சில தளர்வுகள் அறிவிப்பு

2 Min Read

சென்னை, ஏப். 24- தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்ததன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நேற்று  (23.4.2026) நிறைவடைந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் பணப்பட்டுவாடாவை தடுக்க அமைக்கப்பட்ட பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு திரும்பப் பெறப்பட்டது. தேர்தலில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவுக்கான அவசியம் இதுவரை எழவில்லை.

அனைத்து பூத்களிலும் பதிவான வாக்கு விபரங்களை தேர்தல் பார்வையாளர்கள் இன்று  (24.4.2026) சரிபார்ப்பார்கள். இதில் குளறுபடி கண்டறியப்பட்டால் அந்த பூத்தில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்படும். தமிழ்நாட்டில் மொத்தம் 62 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மய்யங்கள் அமைக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை மய்யங்களில் துணை ராணுவம், காவல்துறையினர் இணைந்து 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை நிபந்தனைகளுடன்
விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்

ராமேஸ்வரம், ஏப். 24- ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது. கடந்த 8 மற்றும் 14ஆம் தேதி எல்லை தாண்டியதாக கைதான மீனவர்களை கிளிநொச்சி நீதிமன்றம் விடுவித்தது. விடுதலை செய்யப்பட்ட 14 மீனவர்கள் மெருஹானா முகாமுக்கு கொண்டு செல்லப்பட உள்ளனர். முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் ஓரிரு நாட்களில் விமான மூலமாக தாயகம் அனுப்பி வைக்கப்படுவர்.

ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தில்
வேலை வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம்

எல்.அய்.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 180

* கல்வி தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

* வயது வரம்பு: 21 – 30 வயது வரை,

* ஊதிய விவரம்: ரூ.38,709/- முதல் ரூ.41,509/- வரை

* தேர்வு செய்யப்படும் முறை: இணையவழி தேர்வு, நேர்காணல்

* விண்ணப்பிக்கும் முறை: இணையவழி

* கடைசி தேதி: 30.04.2026

* மேலும் விவரங்களுக்கு: https://ibpsreg.ibps.in/licjamar26/

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *