கொலை முயற்சி வழக்கில் பா.ஜ.க. கவுன்சிலர் கைது தொண்டர்கள் வன்முறையில் இறங்கியதால் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு

1 Min Read

திருவனந்தபுரம், ஜூன் 12 திருவனந்தபுரம் மாநகராட்சியின் 35-ஆவது வார்டு பாஜக கவுன்சிலர் சுகதன், கொலை முயற்சி வழக்கில் நள்ளிரவில்   கைது செய்யப்பட்டார். அவரைத் தொண் டர்கள் தப்ப வைக்க முயன்றதால், காவல்துறையினர் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினர்.

பாஜக கவுன்சிலர்

பாஜக கவுன்சிலர் சுகதன் மீது ஏற்ெகனவே அடிதடி, கொலை முயற்சி, மணல் கடத்தல் எனப் பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வட்டியூர்க்காவு பகுதியில் உள்ள ஒரு கோயில் விழாவில் ஏற்பட்ட மோதலில் இருவர் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் சுகதன் மீது வட்டியூர்க்காவு காவல்துறையினர் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கிடையே, சுகதன் தரப்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முன் பிணை மனு கடந்த இரு நாள்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவரைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

துப்பாக்கிச் சூடு

நேற்று முன்தினம் (9.6.2026) நள்ளிரவு சுகதன் அவரது வீட்டில் இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், வட்டியூர்க் காவு ஆய்வாளர் விபின் தலைமை யிலான காவல்துறையினர் அங்கு விரைந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த பாஜக தொண்டர்கள் காவல்துறையினரை முற்றுகையிட்டு, சுகதனை கைது செய்ய விடாமல் தடுத்து கடும் ரகளையில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் காவல்துறையினரைத் தாக்கவும் முற்பட்டனர். சூழ்நிலை கட்டுக்கடங்காமல் போனதால், ஆய்வாளர் விபின் தனது துப்பாக் கியால் வானத்தை நோக்கிச் சுட்டு கூட்டத்தைக் கலைத்தார்.

இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் சுகதனை அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர் அவர் திருவனந்தபுரம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *