6 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவ – மாணவிகளுக்கு உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

1 Min Read

சென்னை, ஜூன் 9– பள்ளிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கான உடற்கல்வி வகுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை என்றும், அதற்கான பாடவேளைகள் ஒதுக்கப்பட்டாலும், அதில் பிற பாட ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்கப்படுகிறது என்றும் குற்றச்சாட்டு அண்மைக் காலங்களாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு, பள்ளிக் கல்வித் துறை வாயிலாக அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு உத்தரவை பிறப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக நடந்த ஒரு ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு இந்த உத்தரவு வந்திருக்கிறது. அதில், ‘6ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவ- மாணவிகளுக்கு உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும், சிறப்பு விளையாட்டுகள் குறித்து பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும் என்றும், உடற்கல்வி ஆசிரியர்கள் அவர்களுக்கான பாட வேளைகளை கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும், பிற பாட ஆசிரியர்களுக்கு அந்தப் பாட வேளையை தாரை வார்க்கக் கூடாது என்றும்’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு மாணவ – மாணவிகளுக்கும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக வலம் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *