
வல்லம், ஜூன் 9– பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) உலகச் சுற்றுச் சூழல் நாளை யொட்டி “புவியைக் காக்க மரக் கன்றுகள் நடுவோம்” என்ற மய்ய கருத்தினைக் கொண்டு மாபெரும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
சமுதாயப் பணி நடவடிக்கைகள் மற்றம் நிலையான மேம்பாட்டு இலக்குகள் பிரிவு (Outreach Activities & Sustainable Development Goal NSS / NCC) – ஆற்றல் மற்றும் சுற்றுச் சூழல் (CEE) இணைந்து இம் மரக்கன்று நடும் விழாவினை நடத்தியது.
இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக் கழகத்தின் இணை துணைவேந்தர் பேரா. ஆர்.மல்லிகா தலைமை தாங்க, பதிவாளர் பேரா. பி.கே.சிறீவித்யா, தேசிய மாணவர் படையின் (CEE) திருச்சி வான் படை பிரிவு தளபதி கே.சுபாஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் சிறப்பு விருந்தினராக தஞ்சை மாவட்ட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு பொறியாளர் வேதா கலந்துகொண்டு விழிப் புணர்வு உரையாற்றினார்.
அவர் தமது உரையில் சுற்றுச் சூழல் மாசுபாட்டை குறைக்கும் வழி முறைகள் மற்றும் மரம் வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
இறுதியில் நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் தேசிய மாணவர் படையின் அலுவலர்கள், மாண வர்கள், ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினர்கள், பல்கலைக்கழக பணியாளர்கள் வளாகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மரக் கன்றுகளை நட்டனர்.
மேலும் புவியைக் காக்க மரக்கன்று நடுவோம் என்ற உயரிய நோக்கத்துடன் நடை பெற்ற இந்த நிகழ்ச்சி சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கான உறுதி மொழியுடன் நிறைவுபெற்றது
