டெக்கான் கிரானிக்கல், சென்னை:
< தலைநகர் டில்லியில் ‘இண்டியா’ கூட்டணி தலைவர்கள் சங்கமம்: ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக ஆலோசனை. இக்கூட்டத்தில் 23 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
< காங்கிரஸ் செய்த துரோகத்தால் அதிருப்தி அடைந்த திமுக, ஆம் ஆத்மி கட்சிகள் டில்லியில் நேற்று நடந்த இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்தன.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
< திரிணாமூல் காங்கிரஸில் பெரும் பிளவு: என்.டி.ஏ கூட்டணியில் இணைய 20 மக்களவை உறுப்பினர்கள் முடிவு.மக்களவைத் தலைவருக்கு கடிதம்
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
< திரிணாமுல் காங்கிரசை பிளவுபடுத்திய பாஜக: பிளவுறும் டிஎம்சி (TMC): மம்தாவுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள கட்சி எம்.பி.க்களின் பின்னணி: ஒன்றிய பாஜக அமைச்சர் பூபேந்தர் இல்லத்தில் சந்திப்பு. கிளர்ச்சியாளர்கள் 20 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக கூறினாலும் — அவர்களில் குறைந்தது 14 பேர் ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றனர் — மம்தாவுக்கு நெருக்கமானவர்கள் இந்த எண்ணிக்கையை 12 என்று குறிப்பிடுகின்றனர்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
< ‘இந்தியா’ (INDIA) கூட்டணிக் கூட்டத்தில் மோதல்: ஒருங்கிணைப்பு இன்மை மற்றும் திமுக வெளியேறியது குறித்து காங்கிரஸ் மீது கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி. சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ், கூட்டணியில் மிகப்பெரிய கட்சியாகத் திகழும் காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகளை அணுகுவதில் “பெருந்தன்மையுடனும்” “பரந்த மனதுடனும்” செயல்பட வேண்டும் என்று கூறினார்.
தி இந்து:
< மோடி அரசு குறைப்பு: உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானிய விலையிலான சமையல் எரிவாயு (LPG) உருளைகளின் எண்ணிக்கை 9-லிருந்து 4-ஆகக் குறைப்பு. மோடி அரசு நடவடிக்கை.
தி டெலிகிராப்:
< ‘ராமன் கோயில் நிதியில் மோசடி!’ – அகிலேஷ் குற்றச்சாட்டு. அயோத்தி ராமன் கோவிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடையில் பல கோடி ரூபாய் காணாமல் போனதாக தகவல் கிடைத்துள்ளது என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கூறியுள்ளார். இந்த விவகாரத்தை நீதிமன்றம் தனது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
< நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி புனேயில் ஜூன் 11 அன்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்: அபிஜீத் திப்கே. ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) என்பது முழுக்க முழுக்க ‘ஜென்-இசட்’ (GEN Z – தற்போதைய இளம் தலைமுறை) பிரிவினருக்கானது என்றும், இது எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைந்திருக்காது என்றும் திப்கே கூறினார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
< எஸ்அய்ஆர், வாக்கு கொள்ளை மற்றும் தேர்தல் முறைகேடுகள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்ப இந்தியா கூட்டணி கூட்டத்தில் தீர்மானம். அந்தக் கடிதம் விரைவில் தலைமை நீதிபதியிடம் ஒப்படைக்கப்படும்.
– குடந்தை கருணா
