கழக ஏடுகளுக்கு வீடுதோறும் சந்தாக்கள் சேர்க்க தருமபுரி மாவட்ட மகளிரணி கலந்துரையாடலில் தீர்மானம்

2 Min Read

தருமபுரி, ஜூன் 9- மாநிலம் முழுவதும் மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டங்களை நடத்துங்கள் என்ற தமிழக தலைவர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று கடந்த 29.5.2026 அன்று தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரூர், கழக மாவட்டங்களின் இணைந்த மகளிரணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது..

கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாநில மகளிர் அணி துணைச் செயலா ளர் இந்திரா காந்தி தலைமை தாங்கினார். அரூர் கழக மாவட்ட மகளிர் பாசறை தலைவர் பெ.கல்பனா வரவேற்புரை ஆற்றினார். மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி  வழிகாட்டுதல் உரை நிகழ்த்தினார்.

திராவிடர் கழகத்தின் சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன், மாவட்ட தலைவர் பீம.தமிழ் பிரபாகரன் கருத்துரை வழங்கினர்.

மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன்  தன்னுடைய உரையில், ஜூலை மாதம்சேலத்தில் நடைபெற இருக்கும் பொதுக்குழுவில் மகளிர் தோழர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்தார்.

மாவட்ட செயலாளர் கருப்பு சட்டை மா. முனியப்பன், விவசாய அணி பொறுப்பாளர் ஊமை காந்தி, தொழிலாளர் அணி பொறுப்பாளர் ஊமை சங்கர், இளைஞர் அணி அ.பிரபாகரன்,அருணா பீமன், திமுக கிளை பொறுப்பாளர் மு. கணேசன்,அருள் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு ஒத்துழைப்பு நல்கினர்.

மகளிர் தோழர்கள் மத்தூர் முருகம்மாள்,சிவசக்தி, முனியம்மாள், சகுந்தலா, மகேஸ்வரி, நதியா, மகாலட்சுமி, அம்பிகா, ஏஞ்சலா, தனிஷ்கா, அன் பெழில், சசிகலா சௌந்தரி,ரூபிகா, கயல்விழி, பிரதீபா, அகில் நிதி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் தோழர் சங்கீதா பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் இர.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் மகன் செம்மொழி அவர்களுக்கும், மருத்துவர் கனிமொழி, பா.மதிக்கணன் ஆகியோருடைய மகன் செம்மல் வீரமணி அவர்களுக்கும், மு.கருணாநிதி குமுதா ஆகியோரின் மகன் கவின்நிதிக்கும், பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றதற்காக அவர்களை வாழ்த்தி பாராட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன்  சிறப்பு செய்தார்கள்.

கலந்துரையாடலைத் தொடர்ந்து முத்தமிழர் கலைஞர் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செய்யப்பட்டது. “மகளிர் உரிமை காத்த மாண்பாளர் கலைஞர் ” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

மு.இந்திரா காந்தி, மு.குமுதா ஆகி யோர் கலைஞர் குறித்து உரையாற்றினர்.

கலந்து கொண்ட அத்தனை மகளிர் தோழர்களுக்கும் ஒரு பரிசு பொருளும், கலைஞர் பிறந்தநாள் இனிப்பும்,” நீட் தேர்வு கூடாது ஏன்” என்று தமிழர் தலைவர்  எழுதிய சிறுநூலும், “RSS பற்றி” என்ற சிறு நூலும் நிகழ்வின் நினைவாக அளிக்கப்பட்டது.

தீர்மானங்கள்

மகளிர் அணி மகளிர் பாசறை அமைப்புகளை இன்னும் நிறைய புதிய மகளிர் தோழர்களை சேர்த்து வலிமையாக்க வேண்டும்.

பெரியார் பிஞ்சு புதிய சந்தாக்கள் சேர்த்தல் மற்றும் புதுப்பித்தல் மேற்கொள்ள வேண்டும்.

தகடூர் தமிழ்ச்செல்வி  5 பெரியார் பிஞ்சுகளை சந்தாக்களை அறிவித்தார்.

இல்லம் தேடி மகளிர் சந்திப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும்

கலைஞர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் அதிக அளவில் மகளிர் தோழர்கள் கலந்து கொள்ள வேண்டும்

சேலத்தில் ஜூலை 4ல் நடக்க உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு மகளிர் தோழர்கள் அதிக அளவில் பங்கு பெற வேண்டும்.. என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நிகழ்வின் இறுதியாக தோழர் சிவசக்தி  நன்றியுரை ஆற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *