ஓசூர், ஜூன் 9– ஓசூர் ராம்நகரில் 06.06.2026 அன்று கழக சார்பில் மேனாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாள் பரப்புரைக் கூட்டம் மாவட்ட தலைவர் சு.வன வேந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் மா.சின்னசாமி அனைவரையும் வரவேற்றார்.அதனைதொடந்து கழக பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம், மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் ஆகியோர் உரைக்கு பின் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் கலைஞர் பற்றி சிறப்புகள் அவர் தமிழ் நாட்டுக்கு ஆற்றிய அரிய பணிகளை பட்டியலிட்டு அவரை நாம் நன்றியுடன் நினைத்திட வேண்டுமெனவும் உலகம் உள்ளவரை கலைஞர் புகழ் நிலைத்திருக்கும் என்றும் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் செல்லதுரை, பொதுக்குழு உறுப்பினர் கோ.கண்மணி, மகளிரணி மாவட்டத் தலைவர் து.சங்கீதா, மாவட்ட துணைச் செயலாளர்கள் இரா.ஜெயசந்திரன், எழிலன், மாநகரத் தலைவர் து.ரமேஷ், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் சிவந்தி அருணாசலம், திராவிடர் கழக மாணவர் கழக வாசு, விசு, சிவாஜி ஈரோடு பாண்டியன், திமுக 22 வார்டு செயலாளர் ஆறுமுகம், புரட்சிகர ஜனநாயக தொழிலாளர் முன்னணி சங்கர், சின்னசாமி, மக்கள் அதிகார கழகம் ரஞ்சித் குமார், மற்றும் இயக்கத் தோழர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
