குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு பிரச்சாரம் நாகர்கோவில் ஒழுகினச்சேரியில் நடைபெற்றது திராவிடர் கழக மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன் தலைமை தாங்கி பிரச்சாரத்தினை தொடங்கி வைத்தார். திராவிடர் கழக மாநில பொதுக்குழு உறுப்பினர் மு. இராஜசேகர் முன்னிலை வைத்தார். கழக கோட்டாறு பகுதி தலைவர் ச. ச. மணிமேகலை தொழிலாளர் அணி செயலாளர் க. யுவான்ஸ் கழக தோழர்கள் பா. சு. முத்து வைரவன் இரா. முகிலன், இராஜேஷ் ரத்தினமணி மற்றும் பலர் பங்கேற்றனர். பொது மக்களுக்கு தந்தை பெரியாருடைய பகுத்தறிவு கருத்துகள் அடங்கிய நூல்கள் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது. பொதுமக்கள் ஆர்வமுடன் பெரியாருடைய கருத்துகளை படித்தனர்
