திருபுவனத்தில் நடைபெற்ற இரா.தமிழ் பிரபாகரன் – வே. வினிதா இணையேற்பு வரவேற்பு விழாவில்
மதுரை. ஜூன் 7- திருபுவனம் சு.இராசாங்கம் – வெண்ணிலா ஆகி யோரது மகன் இரா.தமிழ் பிரபாகரன், சோழவந்தான் வேல்முருகன் – சீதா லட்சுமி ஆகியோரின் மகள் வே.வினிதா ஆகியோரது திருமண வரவேற்பு விழாவில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு வாழ்த்துரை வழங்கினார்.
இரா.தமிழ் பிரபாகரன் – வே.வினிதா ஆகியோரது வாழ்வினையர் ஏற்பு வரவேற்பு விழா, மதுரை மாவட்டம் திருப்புவனம் புதூர் பி.கே.திருமண மகாலில் 6.6.2026, சனிக்கிழமை அன்று காலை 10:30 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மேனார் நிதி அமைச்சர் மற்றும் மின் துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார் சிவகங்கை மாவட்ட திமுக துணைச் செயலாளர் திருபுவனம் பேரூராட்சி தலைவரும் வேங்கை மாறன் மாநில ஆதிதிராவிட நலக்குழு துணைச் செயலாளர் எஸ்.மாரியப்பன் கென்னடி ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மதுரை எடிசன் ராஜா, மதுரை செல்வம், பேராசிரியர் பெரியார் பித்தன், பகுத்தறிவாளர் கழக மாநில எழுத்தாளர் மன்ற தலைவர் வா.நேரு, சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் அனந்தவேல், மதுரை மாவட்ட திராவிடர் கழகத்தின் தலைவர் முருகானந்தம் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார். மாநில ஒருங்கி ணைப்பாளர் தஞ்சை இரா.குணசேகரன் நிகழ்ச்சியை நெறிப்படுத்தி சிறப்பித்தார்.
முன்னதாக கழகத் தலைவர் குறித்த நேரத்திற்கு நிகழ்விடத்துக்கு வருகை தந்தார். திருமண வீட்டார் சார்பில் அவருக்கு வெடியோசையுடன் தப்பாட்ட இசைக்குழுவினரின் பறையிசையும் முழங்க அதிரடியான வரவேற்பு வழங்கப்பட்டது. கழகத்தின் சார்பில் திராவிட மாணவர் கழகம் மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் கழகத் தலைவரின் சிறப்புகளை எழுச்சிகரமான ஒலி முழக்கங்களை எழுப்பினார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், கழக வெளியீடுகளை அறிமுகப்படுத்திப் பேசினார். தொடக்கத்தில், ‘வைகை பிரபா இசைக்குழு’ வின் சார்பில் கழகப் பாடல்களை பாடினர். வைகை பிரபா அவர்களுக்கு கழகத் தலைவர் மரியாதை செய்தார். இறுதியாக தகைசால் தமிழர் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்.
அவர் தமது உரையில், சுயமரியாதை திருமணம் ஏன் என்பது பற்றிய வரலாற்றை சுருக்கமாக எடுத்துரைத்தார். இந்த திருமண முறை எப்படி நமது பண்பாட்டு படையெடுப்பை முறியடித்தது என்பதை விளக்கினார். சுயமரியாதை திருமண தத்துவத்தை தந்த, தந்தை பெரியார், சட்டமாக்கிய அறிஞர் அண்ணா ஆகியோரை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். மேலும் அவர், திருபுவனம் அருகில் இருக்கும் சுக்கில நத்தம் எனம் ஊரில் தான் சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு, தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் முதல் சுயமரியாதை திருமணம் நடைபெற்ற அரிய வரலாற்றை விவரித்தார். 1935 இல், இதே திருப்புவனத்தில் நடந்தேறிய சுயமரியாதை திருமணம் பற்றி பொருத்தமாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து, பார்ப்பனர்களாலேயே எழுதப்பட்ட வைதீக திருமண மந்திரங்களின் ஆபாசத்தை தோலுரித்துக் காட்டினார். இறுதியாக, மணமக்கள் விட்டுக் கொடுத்தும், சிக்கனமாக வாழ்வும், பெற்றோர்களுக்கு நன்றி காட்ட மறவாதீர் என்று வாழ்த்தி, தனது உரையை நிறைவு செய்தார்.
திருபுவனம் நகர் செயலாளர் கா.நாகூர்கனி, மாவட்டப் பிரதிநிதி ஒன்றிய கவுன்சிலர் அ.ஈஸ்வரன், மாவட்ட பிரதிநிதி ஒன்றிய கவுன்சிலர் சுப.சுப்பையா, திருபுவனம் பேரூராட்சி துணைச் சேர்மன் அ.ரகமத்துல்லாகான், திருபுவனம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் மகேந்திரன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு, செயலாளர் சுப.முருகானந்தம், கழக ஒன்றியச் செயலாளர் பிரமனூர் கே.குமார், மதுரை புதூர் திராவிடர் கழக தலைவர் அ.பாக்கியம், திண்டுக்கல் பெரியார் பெருந்தொண்டர் பொன்.முருகானந்தம், வேம்பத்தூர் ஜெயராமன், மாவட்ட அமைப்பாளர் ஆனந்தவேல், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் வைகை பிரபா மற்றும் ஏராளமான பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
