தங்கச்சிமடத்தில் கலைஞர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

1 Min Read

தங்கச்சிமடம், ஜூன் 6-திராவிடர் எழுச்சி நாள் டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம் – தங்கச்சிமடம் முக்கிய வீதியான  தர்கா நிறுத்தம் பகுதியில் 5.6.2026 அன்று மாலை 5 மணிக்கு நடந்தது.

ராமநாதபுரம் மாவட்ட கழக தலைவர் கே.எம்.சிகாமணி தலைமை வகித்தார்.

மாவட்ட கழக செயலாளர் எம்.முருகேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட பகுத்தறிவுவாளர் கழக தலைவர் எஸ்.பேரின்பம்  வரவேற்பு ரையாற்றினார்.

மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வா.நேரு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் சேசு மிக்கேல், திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர் ராஜ்குமார் சண்முகம், ராமநாதபுரம் மாவட்ட கிழக்கு இளைஞர் அணி செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.சீனி மற்றும் மண்டபம் ஒன்றிய கழக செயலாளர் தேவசகாயம், ராமேஸ்வரம் நகர தலைவர் எட்வர்ட், தங்கச்சிமடம் கழக தலைவர் குழந்தை ராயர், மதிமுக ராமேஸ்வரம் பொறுப்பாளர் கெவிக்குமார், கழகத் தோழர்களும் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *