திருச்சி, ஜூன் 5- கராத்தே, சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்ற திருச்சி – பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவிகள் பல பரிசுகளைப் பெற்றனர்.
9ஆம் வகுப்பு எஸ். நிவேதிதா, 5ஆவது மாநில அளவிலான கராத்தே வாகையருக்கானப் (Championship) போட்டியில் சண்டைப் (Fighting) பிரிவில் முதலிடமும், தனிநபர் பிரிவில் இரண்டாம் இடமும் பெற்று கோப்பையையும், சான்றிதழையும் வென்றார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது மகளிருக்கான கராத்தே வாகையருக்கானப் போட்டியில் Kata பிரிவில் முதலிடம் பெற்று கோப்பையையும், சான்றிதழையும் வென்றார். 8ஆம் வகுப்பு பி.எம்.சாத்விகா, 7ஆவது தேசிய அளவிலான சதுரங்கப்போட்டியில், 12 வய திற்குட்பட்ட மாணவிகள் பங் கேற்ற பிரிவில் கலந்து கொண்டு திருச்சி மாவட்டத்தின் ‘முதன்மை வீராங்கனை’ என்ற பட்டம் பெற்று கோப்பையையும், சான்றி தழையும் வென்றார். திருச்சி மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியிலும் கலந்து கொண்டு 10ஆவது இடத்தைப் பெற்றார்.

இம்மாணவிகளுக்கு பள்ளித் தலைமையாசிரியை, ஆசிரியர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து மாணவிகளை ஊக்கப் படுத்தினர்.
