தமிழ்நாட்டில் மாநிலங்களவை பதவிக்கான இடத்தை காங்கிரசுக்கு ஒதுக்கியது தவெக

சென்னை, ஜூன் 4 தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) எம்பி பதவிக்கான இடைத்தேர்தலில், தவெக தலைமையிலான கூட்டணி யில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு அந்த இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

18ஆம் தேதி இடைத்தேர்தல்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.சண்முகம், மே 7ஆம் தேதி தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஏற்பட்ட காலியிடத்திற்கு ஜூன் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தற்போது வரை ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன், அக்னி ஆழ்வார் மற்றும் ஆவடி வி.ஜெயக் குமார் ஆகிய மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே தேர்தல் நடத்தும் அதிகாரி தேன்மொழியிடம் மனு தாக்கல் செய்துள்ளனர். முக்கிய அரசியல் கட்சிகள் சார்பில் இதுவரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

காங்கிரசுக்கு ஒதுக்கீடு

இந்தச் சூழ்நிலையில், காங் கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் கிரீஷ் சோடங்கர், தலைமைச் செயலகத்தில் தவெக தலைவரும் முதலமைச்சருமான ஜோசப் விஜய்யைச் சந்தித்து, இந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் காங்கிரசுக்கு ஒதுக்கக் கோரினார்.

இதனை ஏற்றுக்கொண்ட தவெக தலைவர் ஜோசப் விஜய், நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில்:

“ஜூன் 18ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், தவெக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு இந்த இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று அறிவித் துள்ளார்.

(ஒரு குதிரையில் இருந்து மற்றொரு குதிரைக்கு…):

முந்தைய கூட்டணியில் இருந்து தங்களுக்குத் தேவையான பதவிகளைப் பெற்றுக்கொண்டு, குறுகிய காலத்திலேயே அரசியல் சூழலுக்கு ஏற்ப மற்றொரு புதிய கூட்டணி தவெக தலைமை இணைந்து மீண்டும் ஒரு மாநிலங் களவை உறுப்பினர் பதவியைப் பெறும் காங்கிரசின் இந்த நகர்வு, அரசியல் வட்டாரத்தில் பதவிக்காக எந்த அளவிற்கும் செல்லத்தயாராகும் இந்தக் குணம் கொள்கையற்ற அதிகாரப் போக்கு ஆகும், இவர்கள் பதவிக்காக மாநில நலன்களைக்கூட தூக்கி வீசத் தயங்கமாட்டார்கள். ஆகையால் தான் இவர்களைத் தமிழ்நாடு அரை நூற்றாண்டாக விலக்கியே வைத்திருந்தது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *