‘வாட்ஸ் அப், யுடியூபில்’ வரும் ‘வதந்தி செய்திகளை தீர்ப்பில் பதிவு செய்வது பேராபத்தை விளைவிக்கும்’

முன்னாள் நீதிபதி கே.சந்துரு

சென்னை, ஜூன் 4 ஊடகங்கள் மற்றும் வாட்ஸ் அப் யுடியூபில் வரும் வதந்திகளில் படிப்பதையெல்லாம் நீதிமன்ற தீர்ப்புகளில் பதிவிடுவது பேராபத்தை ஏற்படுத்தும் என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தெரிவித்துள்ளார். மேலும், நீதிமன்ற ஊழியரை காத்திருக்க வைத்தார் என்பதற்காக, காவல் அதிகாரியை நீதிமன்றத்தில் மாலை வரை காத்திருக்க வைத்தது முறையான செயல் அல்ல என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் நீதிபதி கே.சந்துரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முறையான செயல் அல்ல

குண்டர் சட்டத்தில் கைதான சந் தோஷ் சர்மா என்பவர் தொடர்ந்த ஆட் கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. இந்த வழக்கின் விசார ணைக்காக காவல் அதிகாரி அருணுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.

அழைப்பாணையை வழங்கச் சென்ற நீதிமன்ற ஊழியர், காவல் அதிகாரியின் அலுவலகத்தில் 2 மணி நேரம் காக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. முக்கிய அலுவல் கூட்டத்தில் இருந்ததால் உடனடி யாக அழைப்பாணையைப் பெற முடியவில்லை என்ற காவல் அதிகாரியின் விளக்கத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. இதையடுத்து, காவல் அதிகாரி அருணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

பழிவாங்கும் நடவடிக்கையா?

நீதிமன்ற உத்தரவின்படி காவல் அதிகாரி அருண் ஆஜரானார். ஆனால், வழக்கை உடனடியாக விசாரிக்காமல் அவரை மாலை வரை நீதிமன்றத்தில் நீதிபதிகள் காத்திருக்க வைத்தனர். நீதிமன்ற ஊழியர் காக்க வைக்கப்பட்டதை, அவரும் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு கருத்து கூறப்பட்டது.ஒருவரை நீதி மன்றத்திலேயே காக்க வைப்பது கூட ஒரு வகையான தண்டனைதான். நீதி பதிகள் இவ்வாறு நடந்து கொண்டது முறையான செயல் அல்ல.

சந்தோஷ் சர்மா மீதான குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், சிவில் வழக்குகளில் இச்சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என்ற கருத்தோடு நிறுத்தி யிருக்கலாம். ஆனால், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருக்கும் அருண் குறித்து, “சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற் பட்டவராக இருக்க வேண்டும் என்பதைப் போல, லஞ்ச ஒழிப்புத் துறையிலும் நற்பெயரும் நேர்மையும் கொண்ட அதிகாரிகளே இருக்க வேண்டும்” என்று தீர்ப்பில் அறிவுரை வழங்கியுள்ளனர். இது முற்றிலும் தேவையற்ற செயல்.

வாட்ஸ் அப், யுடியூபில் வரும் வதந்தி

“நீதிபதிகள் தங்கள் முன்னால் உள்ள ஆவணங்களைப் பரிசீலித்தும், வழக்குரைஞர்களின் வாதங்களைக் கேட்டும் மட்டுமே தீர்ப்பு வழங்க வேண்டும். அதைவிடுத்து, தங்களது சொந்தக் கருத்துகளையும், செய்தி சேனல் என்ற பெயரில் யூடியூப் சேனல்,வாட்ஸ்அப் மற்றும் சான் றுகள் இல்லாமல் இருக்கும் ஊடகங் களில் வரும் படிப்பதை யெல்லாம் தீர்ப்பில் பதிவு செய்வது வேண்டாத பேராபத்துகளை உண்டாக்கும்.”

குண்டர் சட்டம் குறித்து கேள்வி

குண்டர் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும், அது ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகவே அதிகமாகப் பிரயோகிக்கப்படுகிறது என்றும் கருத்துகள் வலியுறுத்தப்படுகின்றன. அப்படியிருக்க, நீதிபதிகள் ஏன் 1982ஆம் ஆண்டின் குண்டர் சட் டத்தையே ரத்து செய்ய முன் வரவில்லை என்பதைத் தெரி வித்தால் அது பயனுள்ளதாக இருக் கும் என்றும் முன்னாள் நீதிபதி கே.சந்துரு தனது அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *