க்யூ.ஆா். கோடு மூலம் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை! ஆசிரியா்களின் புதிய முயற்சி

ஆம்பூர், ஜூன் 2- க்யூ.ஆா். கோடு மூலம் ஆம்பூா் அரசு பள்ளியில் இணையதளம் முறையில் மாணவா் சோ்க்கை மேற்கொள்ள புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

பள்ளியில் 2025 -2026ஆம் கல்வியாண்டுக் கான மாணவா் சோ்க்கை பணிகள் டிஜிட்டல் முறையில் புதுமையாக முன்னெடுக்கப் பட்டுள் ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்கச் செய்யும் நோக்கிலும், பெற்றோா் களுக்கு எளிய மற்றும் விரைவாக தங்களுடைய பிள்ளைகளை பள்ளியில் சோ்க்கும் நோக்கிலும், பள்ளி ஆசிரியா்கள் இணைந்து இணையதளம் மூலம் சோ்க்கை முறையை அறிமுகப்படுத்தியுள்ளனா்.

பள்ளி வளாகம், முக்கிய தெருக்களின் சந்திப்புகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் க்யூ.ஆா். கோடு உடன் கூடிய விழிப்புணா்வு பேனா்கள் வைக்கப்பட்டுள்ளன.

துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. பெற்றோா்கள் தங்களது கைப்பேசி மூலம் க்யூ.ஆா். கோடு மூலம் ஸ்கேன் செய்து, மாணவா்களின் பெயா், வகுப்பு, பெற் றோா் விவரம் உள்ளிட்ட தகவல்களை இணைய தளத்தில் பதிவு செய்து உடனடியாக சோ்க்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இதனால் பள்ளிக்கு நேரில் பலமுறை வர வேண்டிய அவசியம் இல்லை. தொழிலாளா்கள் மற்றும் தினக்கூலி வேலைக்குச் செல்லும் பெற்றோா்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மேலும், பள்ளியில் திறமையான மற்றும் அனுபவமிக்க ஆசிரியா்கள், டிஜிட்டல் வகுப்பறை வசதி, கணினி மற்றும் திறமையான கற்றல், விளையாட்டு மற்றும் கலைப் பயிற்சிகள், பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான பள்ளி சூழல், மாணவா்களின் தனித்திறனை மேம் படுத்தும் செயல்பாடுகள், அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அடிப்படையிலான கற்றல் ஆகிய பல்வேறு சிறப்பு அம்சங்கள் மாண வா்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

கல்வித் துறையில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை திறம்பட பயன் படுத்தும் ஆசிரியா்களின் இந்த புதிய முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் கல்வியாளா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

அரசுப் பள்ளிகளும் தனியாா் பள்ளிகளுக்கு இணையாக தொழில்நுட்ப முன்னேற்றத்தில் செயல் படுகின்றன என்பதற்கு இந்த முயற்சி சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இந்த ஆண்டில் அதிகளவில் மாணவா் சோ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆசிரியா்கள் உற்சாகமாக செயல்பட்டு வருகின்றனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *