தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்கள் தவெக பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கடலூர், மே 30- கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த வழக்குரைஞர் வாசுகி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:

தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்கள்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் தவெக கட்சியினர், பெற்றோரைத் தங்கள் கட்சிக்கு வாக்களிக்குமாறு சிறுவர்கள் மூலம் செல்வாக்கு செலுத்தி, குழந்தைகளை பிரச்சாரத்தில் பயன்படுத்தியுள்ளனர்.

எனவே, தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட தவெக, கட்சிக்கு எதிராகச் சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசியல் கட்சிகளின் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்: தவெக தரப்பு (மூத்த வழக்குரைஞர்
எஸ்.முரளிதர்):

“வெறும் செய்தித்தாள் செய்திகளின் அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டுவிடும். விதிமீறல் தொடர்பாக தேர்தல் வழக்கு மட்டுமே தொடர முடியும்; பொதுநல வழக்கு உகந்ததல்ல.”

திமுக தரப்பு (மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ):

“குழந்தைகளைப் பிரச்சாரத்தில் பயன்படுத்தியதாக திமுக மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. ஊழல் மற்றும் பணப்பட்டுவாடா புகாரைப் பொறுத்தவரை, வெற்றி பெற்ற வேட்பாளரைத்தான் இதில் எதிர்மனுதாரராகச் சேர்க்க வேண்டும்.”

அதிமுக தரப்பு (மூத்த வழக்குரைஞர் எஸ்.ஆர்.ராஜகோபால்):

“மனுதாரரின் முக்கியக் குற்றச்சாட்டு தவெக மீதுதான் உள்ளது. எனவே அவர்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிடலாம். அதிமுகவுக்கு எதிராக நேரடி குற்றச்சாட்டு இல்லாததால், எங்கள் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.”

நீதிமன்ற உத்தரவு

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், இந்த மனுவுக்குப் பதிலளிக்கக் கூடுதல் அவகாசம் தேவை என்று கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக தவெக மற்றும் தேர்தல் ஆணையம் ஆகிய தரப்பினர் விரிவான பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *