சம உரிமை கூடாதென்பதற்காகவே ராயல் கமிஷன் புறக்கணிப்பு!

1 Min Read

ராயல் கமிசனைப் பகிஷ்கரிக்கும் விசயமாய் அரசியல்வாதிகள் இடும் கூச்சல்கள் எல்லாம் புரட்டு என்றும், அது பெரிதும் வகுப்பு உரிமைக்கு விரோதமாய்ப் போடும் கூச்சல்கள் என்றும் ஆதிமுதல் கொண்டே எழுதி வந்திருக்கின்றோம்.
உதாரணமாக, வகுப்பு உரிமை வேண்டுமென்று கேட்கப்படும் எந்தக் கூட்டத்தாராலாவது பகிஷ்காரம் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றதா? என்பதைப் பார்த்தால் தெரியவரும்.
அத்துடன் கமிசனைப் பகிஷ்கரிக்கும் ஒவ்வொரு கூட்டமும், வகுப்புரிமை கூடாதென்பதையும் வற்புறுத்திக்கொண்டே வருகின்றது.
எனவே, கமிசனை அடியோடு பகிஷ்கரிக்க வேண்டும் என்று சொல்லும் தத்துவம் கமிசனில் எல்லா வகுப்புகளுக்கும் சம உரிமை கிடைக்கும்படியான நிலைமை ஏதாவது ஏற்பட்டு விடுமோ என்கின்ற பயத்தாலேயே ஒழிய, கமிசனால் இந்திய அரசியல் சுதந்திரத்திற்கு ஏதாவது கெடுதி வந்து விடுமோ என்கின்ற காரணத்தாலல்லவென்றே சொல்லுவோம்.
(‘குடிஅரசு’ – கட்டுரை – 8.1.1928,
தொகுதி 6, பக்கம் 15)
க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி – 624 705

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *