எரிபொருள் விலை உயர்வு எதிரொலி: ஏர் இந்தியாவின் உள்நாட்டு விமான சேவையை குறைக்க முடிவு!

புதுடில்லி, மே 28 ஈரான் -அமெ ரிக்கா, இஸ்ரேல் போர் எதிரொலியாக பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விமான எரிபொருள் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக விமானங்களும் வழக்கமானதை காட்டிலும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான இயக்கத்திற்கான செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளன. எரிபொருள் விலை உயர்வினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக உள்நாட்டு விமான சேவை களை 22 சதவீதம் குறைப்பதற்கு ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஏற்ெகனவே தனது பன்னாட்டு விமான சேவைகளில் 27 சதவீதம் குறைப்பதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே அறிவித்து இருந்தது. இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில்,‘‘2026ஆம் ஆண்டு ஜூன் மற்றும் ஆகஸ்ட்க்கு இடைப்பட்ட காலத்தில் தேர்ந்தெடுக்கப் பட்ட பன்னாட்டு சேவைகளில் நாங்கள் ஏற்ெகனவே அறிவித்த மாற்றங்களின் தொடர்ச்சியாக அதே காலகட்டத்தில் சில உள்நாட்டு வழித்தடங்களிலும் எங்கள் செயல்பாடுகளை தற்காலிகமாக முறைப்படுத்தி உள்ளோம்.

இதன் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப் பட்ட வழித்தடங்களில் விமானங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா வாரத்திற்கு 3600 உள்நாட்டு விமான சேவைகளில் அடிப்படையில் பார்க்கும் போது இந்த 22 சதவீதக் குறைப்பு என்பது சுமார் 790க்கும் மேற்பட்ட சேவைகள் குறைக்கப்படும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *