கோவையில் தொடரும் பாலியல் குற்றங்கள் பக்கத்து வீட்டில் விளையாடச் சென்ற 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது!

கோவை, மே 27 கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்வு மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

 10 வயது சிறுமி

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்ததால், அவர் தூத்துக்குடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளார். இதனால் முத்துக்குமார் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவருடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் 10 வயது சிறுமி, கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பக்கத்து வீடு என்பதால், அந்த சிறுமி அடிக்கடி முத்துக்குமார் வீட்டிற்கு விளையாடச் செல்வது வழக்கம். கடந்த 19-ஆம் தேதி  அச்சிறுமி வழக்கம்போல் முத்துக்குமார் வீட்டிற்கு விளையாடச் சென்றுள்ளார். அப்போது முத்துக்குமார் அந்த சிறுமிக்கு உணவு சமைத்துக் கொடுத்து, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியும் பயமும் அடைந்த சிறுமி, அவரிடமிருந்து தப்பித்து அழுதுகொண்டே தனது வீட்டிற்கு ஓடியுள்ளார்.

மகளின் அழுகையைக் கண்டு பதறிய தாயார் விசாரித்தபோது, தனக்கு நேர்ந்த கொடூரத்தை அந்தச் சிறுமி அழுதுகொண்டே விவரித்துள்ளார்.

கைது

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக கோவை ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் முத்துக்குமாரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என்பது உறுதியானது. இதையடுத்து, முத்துக்குமார் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நேற்று (26.5.2026) மாலை அவரை  கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவையில் அடுத்தடுத்து சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் இத்தகைய பாலியல் குற்றங்கள் பொதுமக்களிடையேயும், சமூக ஆர்வலர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

 

விவசாய பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பு

 தேர்தல் வாக்குறுதியை மீறிவிட்டார்

 முதலமைச்சர் ஜோசப் விஜய் மீது எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!

சென்னை, மே 27 தமிழ்நாடு அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களில் ரூ.50,000 வரை மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு கடன் சுமையில் தவிக்கும் விவசாயிகளின் துயரத்தைத் தீர்க்காது என்றும், தேர்தல் வாக்குறுதியை மீறிய ஏமாற்று வேலை என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.

இது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கைகளின் விவரம் பின்வருமாறு:

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): “தமிழ்நாடு  முதலமைச்சர் அறிவித்துள்ள ரூ.50,000 வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி, தலைமுறை தலைமுறையாக கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் துயரங்களைக் குறைக்காது. ‘5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்’ என தவெக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. தற்போதைய அறிவிப்பு அந்த உறுதிமொழிக்கு மாறானது. எனவே, வாக்குறுதிப்படி 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகளின் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும்.”

பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): “தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 50 விழுக்காடு கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அதற்கேற்ப  முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது நடவடிக்கைகளை மாற்றியமைக்க வேண்டும்.”

தேர்தல் கால வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி, நலிவடைந்துள்ள விவசாயப் பெருங்குடி மக்களைக் காக்க  முதலமைச்சர் விஜய் இந்த அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற்று, புதிய மறு உத்தரவை வழங்க வேண்டும் என அனைத்துத் தலைவர்களும் ஒருமித்த குரலில் வலியுறுத்தியுள்ளனர்.

ஒப்பந்த நடவடிக்கைகள் இணைய வழியில் நடைபெறும்

சென்னை நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

சென்னை, மே 27 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வகையில், அத்துறை சார்ந்த அனைத்து ஒப்பந்த நடவடிக்கைகளும் இனி இணையதளம் மூலமாக மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய வழிமுறைகளின்படி பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் கட்டட அனுமதிக்காக விண்ணப்பிக்கும் போது செலுத்த வேண்டிய கட்டணங்கள் அனைத்தும் இனி இணையதளம் மூலமாக மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது:

விண்ணப்பக் கட்டணம், முன்வைப்புத் தொகை, பாதுகாப்புத் தொகை மக்களின் அலையடிப்பைக் குறைக்கவும், நிர்வாகப் பணிகளை விரைவுபடுத்தவும் இந்த டிஜிட்டல் நடைமுறை கட்டாயமாக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *