தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறி புதிய அரசு பொறுப்பேற்ற 12 நாளில் 30க்கும் மேற்பட்ட பெரிய குற்றங்கள்! எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

1 Min Read

சென்னை, மே 25- புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 12 நாளில் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், ரவுடிகள் தாக்குதல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறிய அராஜகம், தற்போது கோவை சிறுமி கடத்தி கொலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பெரிய நிகழ்வுகள் நடந்துள்ளது. இனி ஒரு சம்பவம் இதுபோல் நடக்காமல் இருக்க சட்டம்- ஒழுங்கிற்கு முதல் முக்கியத்துவத்தை முதலமைச்சர் தர வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:

கோவை சிறுமி கொலை

கோவையில் 10 வயது சிறுமி, கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை சம்பவத் துக்கு உண்மையான நீதி வேண்டும் என்ற குரல், எல்லாம் பக்கமும் ஒலிக்கிறது.

இந்தியா முழுவதும் அதிர்வலை களை ஏற்படுத்தி இருக்கிற இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து, கோவை மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்துகிறார்கள். இந்த மிருகத்தனமான செயலைச் செய்த உண்மை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை விரைந்து பெற்றுத் தர வேண்டும். இந்த இக்கட்டான நேரத்தில், சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு, திமுக அவர்களுக்கு துணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய அரசு பொறுப்பேற்றதி லிருந்து, 12 நாளில் பாலியல் வன் கொடுமை, கஞ்சா கடத்தல், ரவுடிகள் தாக்குதல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறிய அராஜகம், தற்போது கோவை சிறுமி கடத்தி கொலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பெரிய நிகழ்வுகள் செய்திகளாக வந்து கொண்டே இருப்பது, மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது. இனி ஒரு சம்பவம் இதுபோல் நடக்காமல் இருக்க சட்டம் ஒழுங்கிற்கு முதல் முக்கியத்துவத்தை முதலமைச்சர் தர வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு பதிவில் கூறப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *