இலால்குடி கழக மாவட்டம் கீழவாளாடியில் திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது!

2 Min Read

திராவிடர் கழகம்

இலால்குடி, மே 24- இலால்குடி கழக மாவட்டம் திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 24.05.2026 ஞாயிற்றுக்கிழமை (ஒருநாள்)  கீழவாளாடி பெரியார் பெருந்தொண்டர் பெ.சங்கப்பிள்ளை அன்பகத்தில் எழுச்சியோடு தொடங்கியது.

இலால்குடி மாவட்ட கழகத் தலைவர் வீ.அன்புராஜா தலைமை ஏற்று உரையாற்றினார்.

மாவட்ட காப்பாளர் ப.ஆல்பர்ட், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட பகுத்தறி வாளர் கழக துணைத் தலைவர் பாபு ராஜ், மாவட்ட துணைத் தலைவர் திருநாவுக்கரசு, மாவட்ட துணைச் செயலாளர் சித்தார்த்தன், இலால்குடி ஒன்றியத் தலைவர் பிச்சைமணி.ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர். தலைமை ஆசிரியர் மு.செல்வி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

மாவட்ட மாணவர் கழகத் தலைவர் அவனிகோ இளந்திரையன் அனை வரையும் வரவேற்று உரையாற்றினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், பயிற்சிப் பட்டறையை நெறிப்படுத்தியும், மாணாவர்கள்  பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை எடுத்துக் கூறியும் நோக்க உரையாற்றினார்.

தொடர்ந்து தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு எனும் தலைப்பில் ஆசிரியர் மா.அழகிரிசாமி முதல் வகுப்பினை தொடங்கினார்.

பார்ப்பனப் பண்பாட்டுப் படை யெடுப்பு மற்றும்  ஜாதி ஒழிப்புப் போரில் திராவிடர் கழகம் நேற்று- இன்று – நாளை என்ற தலைப்பில் இரு வகுப்புகளாக முனைவர் துரை.சந்திரசேகரன், அவர்களும், சமூக நீதி வரலாறு என்ற தலைப்பில் பேராசிரியர் நம்.சீனிவாசன்,

தந்தை பெரியாரின் பெண் விடுதலை சிந்தனைகள் மற்றும் ஹிந்து ஹிந்துத்துவா, சங்பரிவார் ஆர்.எஸ்.எஸ். என்ற இரண்டு தலைப்பில் இரண்டு வகுப்பாக ச.பிரின்சு என்னாரெசு பெரியார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்களின் சாதனைகள் என்ற தலைப்பில் வி.சி.வில்வமும். வகுப்பெடுக்கின்றனர்.

நிகழ்வில்  பொதுக் குழு உறுப்பினர் முத்துசாமி, மாவட்ட ப.க. செயலாளர் இளஞ்சேட் சென்னி. முன்னாள் மாவட்ட தலைவர் சிவசங்கரன். மண்ணச்சநல்லூர் ஒன்றியத் தலைவர் கு.பொ.பெரியசாமி, நகரச் செயலாளர் க. பாலச்சந்திரன். ஒன்றிய இளைஞரணி தலைவர் யுவராஜ், கீழவாளாடி மகளிர் அணி தலைவர் வசந்தகுமாரி மகளிரணி செயலாளர் வள்ளியம்மாள், பாடகர்  பொற்செழியன். சந்திரசேகரன். மகளிரணி சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

பயிற்சிப் பட்டறையில் 55 மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *