ரூ.993 கோடி செலவில் அரக்கோணம் – செங்கல்பட்டு இடையே இரட்டை வழித்தடத்திற்கு ரயில்வே ஒப்புதல்!

1 Min Read

சென்னை, மே 21- சென்னை புறநகர் ரயில் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் அரக்கோணம் செங்கல்பட்டு இடையே ரூ.993 கோடி செலவில் 68 கிமீ தொலைவிற்கு இரட்டை வழித்தடம் அமைக்க இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த வழித்தடம் சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல் பட்டு, அரக்கோணம் ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கியமான சென்னை புறநகர் ரயில் கட்டமைப்பாகும்.

இது குறித்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

அரக்கோணம்-செங்கல்பட்டு இடையேயான இந்த இரட்டை வழித்தடத் திட்டம் பரபரப்பான சென்னை புறநகர் ரயில் கட்டமைப்பில் உள்ள பயணிகள் நெரிசலைக் குறைப்பதற்கும், நேரம் தவறாமை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் முக்கியப் பங்கு வகிக்கும்.

இந்த வழித்தடம், பயணிகள் மற்றும் சரக்குப் போக்கு வரத்தை வலுப்படுத்தும் என்றும், சிமெண்ட், வாகன உதிரி பாகங்கள், உணவு தானியங்கள், இரும்பு உள்ளிட்ட முக்கியப் பொருட்களின் சரக்குப் போக்குவரத்திற்கும் பயனளிக்கும்.

இந்த வழித்தடம் மூலம் ரயில்கள் காத்திருப்பு நேரம் குறையும். அத்துடன் நேரந் தவறாமையை மேம்படுத்தவும் புறநகர் சேவைகளின் எண்ணிக் கையை அதிகரிக்கவும் உதவும்.

இந்த வழித்தடம் மகேந்திரா வேர்ல்டு சிட்டி, சிறீபெரும்புதூர், ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை மற்றும் வாகன உதிரிபாகங்கள், சிமெண்ட் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொருளா தாரம் மற்றும் தொழில்துறை மய்யங்களை இணைக்கிறது.

காஞ்சிபுரம் அருகே பரிந் துரைக்கப்பட்டுள்ள பரந்தூர் விமான நிலையத் திட்டமும் இதன் அருகே இருப்பதால் இந்த வழித்தடத்தின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கிறது.

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டை வழித்தடத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதன் மூலம் ரயில் உள்கட்டமைப்பை நவீனப்படுத்துவது, கட்டமைப் பின் திறன் மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதில் இந்திய ரயில்வேயின் முயற்சிகளில் மற்றும் ஒரு சிறந்த நடவடிக்கை யாகக் கருதப்படுகிறது.

இத்திட்டம் புறநகர் மற்றும் சரக்குப் போக்குவரத்தை வலுப்படுத்தி பிராந்திய தொழில்துறை வளர்ச்சிக்கு ஆதரவளித்து, விரைவான, பாதுகாப்பான, மேலும் நம்பத்தகுந்த போக்குவரத்து சேவைகளை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *