சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்!

2 Min Read

சென்னை, மே 20 சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலவி வரும் நீதிபதிகள் பற்றாக்குறையை போக்கும் வகையில், 19 புதிய நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

பின்னணி மற்றும் தற்போதைய நிலை

சென்னை உயர் நீதிமன்றத்திற்கான மொத்த நீதிபதிகளின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை 75 ஆகும். ஆனால், தற்போதைய நிலையில் 52 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர்.

நடப்பு மாத இறுதியில் மூத்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் ஓய்வு பெற உள்ளதால், இந்த எண்ணிக்கை 51 ஆகக் குறையும் சூழல் இருந்தது. இதனால் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது.

நீதிபதிகள் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக தொடர் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.

19 புதிய நீதிபதிகள்

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலை மையிலான கொலிஜியம் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட் டத்தில், சென்னை உயர் நீதிமன்றத் திற்கு பரிந்துரைக்கப்பட்ட 19 பேருக்கு நீதிபதிகளாக பதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஒன்றிய அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைக்கப்பட்டுள்ள 19 பேரின் விவரம் வருமாறு: மாவட்ட நீதிபதிகள் பிரிவு (9 நபர்கள்):

பி.முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, திருமகள் சந்திரசேகர், தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், கார்த்திகேயன் பால தாண்டாயுதம், சண்முகம் கார்த்திகேயன், பாலுச்சாமி முருகேசன் மற்றும் குணசேகரன்.

வழக்குரைஞர்கள் பிரிவு (10 நபர்கள்):

என்.ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ராஜேஷ் விவேகானந்தன், சங்கரநாரா யணன் ரவிக்குமார், நாகராஜன் திலீப்குமார், இ.மனோகரன், கிருஷ்ண சாமி கோவிந்தராஜன், ரஜினிஷ் பதியில், கே.அப்பாதுரை மற்றும் ஆர்.அனிதா.

கொலிஜியம் அனுப்பியுள்ள இந்த பட்டியலை ஒன்றிய அரசு பரிசீலனை செய்த பிறகு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புதிய நீதிபதிகளை நியமிப்பதற்கான அதிகாரப்பூர்வ ஆணையை பிறப்பிப்பார். இதற்கான நடைமுறைகள் விரைவில் தொடங்க வுள்ளன. இந்த 19 புதிய நீதிபதிகளும் முறைப்படி நியமிக்கப்படும் பட்சத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை வெறும் 3 ஆகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *