சென்னை, மே 19- திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் முதலமைச்ச ராவது எளிதல்ல. குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதாலேயே தவெகவுக்கு ஆதரவு அளித்தோம்.
பாஜக ஆதரவு கட்சி என தவெகவை விமர்சித்துள்ளேன். அதில் மாற்றுக்கருத்து இல்லை.
என்னை முதலமைச்ச ராக்க திமுக, அதிமுக தரப்பில் இருந்து அதிகாரப் பூர்வமான யாரும் அணுகவில்லை.
பலரும் யூகங்களாக எழுதியதையும் கிசுகிசுக்களையும் மட்டுமே அவ்வாறு நான் பேசினேன். தவெக அரசின் அமைச்சரவையில் நாங்கள் ஒருபோதும் இடம்பெற மாட்டோம்.
அதை ஏற்கெனவே கூறிவிட்டேன். இரண்டு இடங்களை வைத்துக்கொண்டு நான் யாரிடமும் பேரம் பேச வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு குறிப்பிட்டார்.
