‘டாஸ்மாக் கடையில் ரூ.10 கூடுதல்’ கேள்வி கேட்ட மதுப்பிரியர் கூட்டத்தை பாதியில் முடித்துவிட்டு ஓட்டம் பிடித்த தவெக எம்எல்ஏ!

மொடக்குறிச்சி, மே 17 மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட லக்காபுரம், சோலார், 46 புதூர், முத்துக்கவுண்டன் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றுமுன்தினம் (15.5.2026) தவெக சட்டமன்ற உறுப்பினர் சண்முகன் திறந்த காரில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

லக்காபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் சண்முகன், ‘‘டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது உள்பட இன்னும் பல மாற்றங்களை தமிழ்நாடு பார்க்க உள்ளது’’ எனத் தெரிவித்தார்.

அப்போது கூட்டத்தில் இருந்த மதுபிரியர் ஒருவர் திடீரென, ‘‘மது கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குகிறார்கள். அதை நிறுத்த சொல்லி உத்தரவிட்டீர்களா?’’ என சட்டமன்ற உறுப்பினரிடம் அதிரடியாக கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்த சட்டமன்ற உறுப்பினர் சண்முகம், ‘‘இனி கூடுதலாக வாங்க மாட்டார்கள். எங்காவது ரூ.10  வசூலித்தால் என்னிடம் சொல்லுங்கள்’’ என்றார். சட்டமன்ற உறுப்பினர் அவ்வாறு கூறிய உடனே அந்த மதுப்பிரியர், ‘‘அருகில் இருக்கும் கடையில்தான் இப்போது ரூ.10 கூடுதலாக வாங்குகிறார்கள். என்னுடன் வாருங்கள், நான் காட்டுகிறேன்’’ என உடனடியாக அழைத்தார். மதுப்பிரியரின் இந்த எதிர்பாராத பதிலடியால் சற்று நிலைதடுமாறிய சட்டமன்ற உறுப்பினர் சண்முகன், ‘‘நான் மொடக்குறிச்சி தொகுதி அலுவலகத்தில் இருப்பேன். அங்கு வந்து இது பற்றி கூறுங்கள்’’ என சமாளித்தார்.

மேலும், அதற்கு மேல் அங்கு நிற்காமல், உடனடியாக கூட்டத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு, ‘‘வண்டியை எடுங்கள்… போகலாம்’’ எனக் கூறிவிட்டு அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டுச் சென்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *