பெட்ரோல், டீசல் விலை உயர்வு சுவிகி, சொமேட்டோ டெலிவரி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு!

சென்னை, மே 17 மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வுக்கு ஏற்றாற்போல ஊதியத்தை உயர்த்த கோரியும் நாடு முழுவதும் சுவிகி, சொமேட்டோ டெலிவரி ஊழியர்கள் கிக் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கின்றனர்.  எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு சுமார் ரூ.3 எரிபொருள் விலையை உயர்த்தியதன் பின்னணியில் இந்த வேலை நிறுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.90க்கும், டீசல் லிட்டர் ரூ.95.47க்கும் விற்பனை செய்யப்படுகிறது. டாக்ஸி டிரைவர்களும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பல ஓட்டுநர்கள், எரிபொருள் செலவு தங்கள் வருவாயின் பெரும் பங்கை எடுத்துக்கொள்வதாகவும், ஆப் நிறுவனங்கள் அதிகரிக்கும் செலவுகளுக்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்த வில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *