புதுடில்லி, மே.15- தேர்தல்களை நேர்மையாக நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் நிச்சயம் சுதந்திர மாக செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
சட்ட திருத்தம்
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம் கொண்டு வந்தது.
அதன்படி பிரதமர், எதிர்க் கட்சித்தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்றிருந்த தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவில், தலைமை நீதிபதிக்குப் பதிலாக ஒன்றிய அமைச்சர் ஒருவர் என மாற்றி சட்டத்தை திருத்தியது.
அரசின் இந்த சட்டதிருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்துள் ளனர். இந்த வழக்குகளை நீதிபதி திபாங்கர் தத்தா, சதிஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கின் இறுதி விசா ரணை நேற்று மீண்டும் இந்த அமர்வில் நடந்தது.
அடிப்படை கட்டமைப்பு
முன்னதாக இந்த வழக்கில் ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் சமர்ப்பித்தல் ஒன்றில், ‘தேர்தல் ஆணையம் சுதந் திரமாக இருப்பது மட்டும் போதாது, அது சுதந்திரமாகத் தோன்றவும் வேண் டும்’ என குறிப்பிட்டு இருந்தார்.
அதன் மீது நீதிபதிகள் நேற்று விசாரித்துக்கொண்டு இருந்த போது, தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் குறித்து நீதிபதிகள் சில கருத்துகளை வெளியிட்டனர்.
அதன்படி, ‘தேர்தல் ஆணையத் தின் சுதந்திரம் என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்ட மைப்பின் ஒரு அம்சம் ஆகும். ஏனெனில் நேர்மையான மற்றும் வெளிப்படையான தேர்தல்கள் அதை |சார்ந்தே உள்ளன’ என்று நீதிபதி திபாங்கர் தத்தா கூறினார்.
நீதிபதிகள் கேள்வி
எனவே தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படாவிட்டால், நேர்மையான மற்றும் வெளிப்படை யான தேர்தல்களை உறுதி செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.
மேலும் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவில் மூன்றாவது நடுநிலை நபர் ஒருவர் இருந்ததைப் போன்ற ஒரு தோற்றம் ஏற்படும் அளவுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், அவர் ஏன் அமைச்சரவையிலிருந்து ஓர் அமைச்சராக இருக்க வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பினர்.
பின்னர் விசாரணை தொடர்ந்து நடந்தது.
