பருவநிலை மாற்றம்! தமிழ்நாட்டில் டெங்கு பரவும் அபாயம்! உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

சென்னை, மே 14- தமிழ்நாட்டில் நிலவி வரும் திடீர் பருவநிலை மாற்றம் மற்றும் பரவலாக பெய்த மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பருவகால மாற்றம்!

தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் கோடை வெயிலின் தாக்கம் ஏப்ரல் தொடக்கத்திலேயே அதிகரித்தது. கத்திரி வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இந்தத் திடீர் மழையும், அதைத் தொடர்ந்து நிலவும் வானிலை மாற்றமும் ஏடிஸ் (Aedes) வகை கொசுக்கள் பெருகுவதற்குச் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளன.

குறித்த தகவல்களைச் சுகாதாரத் துறையின் இணையப் பக்கத்தில் உடனுக்குடன் பதிவேற்ற வேண்டும். நிகழ்நேர தரவுகளைக் கொண்டு பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிகள் மற்றும் தொழிற்சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

வாராந்திரப் பராமரிப்பு: தண்ணீர் தொட்டிகள், குளிர்பதன பெட்டிகள், பழைய டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கும் நீரை வாரம் ஒருமுறை அகற்றிச் சுத்தப் படுத்த வேண்டும்.

டெங்கு பரிசோதனை!

அரசு மருத்துவமனை களில் டெங்கு பரிசோ தனைகளை எவ்விதக் கட்டணமுமின்றி மேற்கொள்ளத் தேவையான மருத்துவ உபகரணங்களைப் போதிய அளவில் இருப்பு வைக்க வேண்டும்.

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த தடுப்பு நடவடிக்கைகளால் டெங்கு பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் கணிசமாகக் குறைக்கப்பட்டன.

இந்த நிலையைத் தக்கவைக்க உள்ளாட்சி அமைப்புகளும் சுகாதாரத் துறையும் இணைந்து தீவிரமாகச் செயல்பட வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொது இடங்கள் மட்டுமின்றி, தங்கள் வசிப்பிடங்களைச் சுற்றிலும் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம் எனச் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் சுய மருத்துவம் செய்து கொள் ளாமல், உடனடியாக அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள் அல்லது மருத்துவமனைகளை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *