கோவை சிறுமி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது! தப்ப முயன்ற முக்கிய குற்றவாளிக்கு கால் முறிவு!

கோவை, மே 23- கோவை அருகே 10 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவரை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.

இந்த நிகழ்வு பொது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விடிய விடிய போராட்டங்களும் நடந்து வருகின்றன.

மேலும் ஒருவர் கைது

இந்த வழக்கில் ஏற்கெனவே கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரது நண்பரான மோகன் ராஜ் என்பவ ரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான கார்த்திக், காவல் துறையின ரிடம் இருந்து தப்பியோட முயன்றுள்ளார். அப்போது அவருக்கு காலில் எலும்பு முறிவு (fracture) ஏற்பட்டது.

தற்போது அவர் பலத்த காவலுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விடிய விடிய போராட்டம்

சிறுமியின் மரணத்திற்கு நியாயம் கோரியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும் சிறுமியின் உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் விடிய விடிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *