அபாய எச்சரிக்கை…! பூமியில் வாழ்வதற்கான பாதுகாப்பான வரம்புகளை கடந்துவிட்ட மனிதர்கள்…!

ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்கா வரை மிகவும் சிக்கலான ‘ஹாட்ஸ்பாட்கள்’.

நாம் விரைவில் விழித்துக் கொள்ளா விட்டால், பூமியில் உள்ள உயிர்கள் அழிந்துவிடும் என பூமி ஆணையம் நடத்திய ஆய்வில் ஆச்சரியமூட்டும் தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

40 முன்னணி பன்னாட்டு இயற்கை மற்றும் சமூக விஞ்ஞானிகளைக் கொண்ட எர்த் கமிஷன் குழு பூமி எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் மற்றும் அவற்றின் காரணங்கள் குறித்து அண்மையில் ஆய்வு நடத்தியது.

இதுகுறித்த அறிக்கை நேச்சர் இதழில் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

அதிகப்படியான வளங்கள் சுரண்டல், அலட்சியம், பல சுயநலக் குற்றங்களால் பூமியை நாசமாக்கிக் கொண்டிருக் கிறோம்.

மனித ஆதிக்கம் பூமியின் முக்கிய அமைப்புகளின் ஸ்திரத்தன்மையை படிப்படியாக சீர்குலைத்து வருகிறது.

எதிர்கால சந்ததியினர் மற்றும் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் நாம் பெரும் ஆபத்தில் ஆழ்த்துகிறோம்.

புவி வெப்பமடைதல், வறட்சி, கடும் வெள்ளம் போன்ற சீற்றங்களால் பூமியின் ஆக்கிரமிப்புகளை நாம் கவனிக்கவில்லை என்றால் நிலைமை கைமீற அதிக காலம் எடுக்காது.

ஆய்வின் ஒரு பகுதியாக, சமநிலை முற்றிலுமாக சீர்குலைந்து மிகவும் சிக்கலாக மாறிய பல பகுதிகளை ஆய்வுக் குழு கண்டறிந்து உள்ளது. இதனை ‘ஹாட்ஸ்பாட்’ என அழைக்கிறார்கள். உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு கண்டத்திலும் இது போன்ற ஹாட்ஸ்பாட்கள் இருப்பது கவலையளிக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதில் பல பகுதிகளில் ஏற்படும் பிரச்சினைக்கு பருவநிலை மாற்றமே முக்கிய காரணம் என கண்டறியப் பட்டுள்ளது.

“குறிப்பாக ஆசியாவில் கிரையோஸ்பியர் மலை விரைவான மாற்றங்களுக்கு உட்பட்டு வருகிறது. பனிப்பாறைகள் உருகுவதில் தொடங்கி, நடக்கக்கூடாத அனைத்து எதிர்மறை விளைவுகளும் அபாயகரமான வேகத்தில் நடந்து வருகின்றன. இதன் விளைவாக, முழு பிராந்தியமும் மிக விரைவில் சமூக மற்றும் பொருளாதார எழுச்சிகளை சந்திக்கும்” என்று இணை ஆராய்ச்சியாளர் பேராசிரியர் கிறிஸ்டி ஏபி எச்சரித்து உள்ளார்.

நில பாதுகாப்பு தொடர்பாக சுமார் 8 வகையான குறிகாட்டிகள் முக்கியமானதாக சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கருதுகின்றனர். புவி ஆணையத்தின் ஆய்வில் 7 குறியீடுகள் அங்கீகரிக்கப்பட்ட வரம்பை தாண்டி ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாக முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கிழக்கு அய்ரோப்பா, தெற்காசியா மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்காவில் பல பகுதிகள், பிரேசிலின் பல பகுதிகள், அமெரிக்காவில் பல பகுதிகள், மெக்சிகோ/சீனா.

பூமியானது சூழலியல் ரீதியாக பாதுகாப்பான நிலையை எப்போதோ கடந்துவிட்டது. நாளுக்கு நாள் ஆபத்தானதாக மாறி வருகிறது.

பூமியில் வாழக்கூடிய தன்மையை உறுதி செய்யும் அனைத்து உயிர்-இயற்பியல் அமைப்புகளையும் சரிசெய்வது உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும்.

அப்போது நிலக்கரி, எண்ணெய், இயற்கை எரிவாயு போன்ற முக்கிய வளங்களின் பற்றாக்குறையை பூமி தானாகவே மாற்றிக்கொள்ள முடியும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *