‘நீட்’ தேர்வை எதிர்த்து வரும் 16ஆம் தேதி சனிக்கிழமை காலை சென்னை – ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திராவிட இயக்கப் போர்வாள் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் எம்.பி. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமைச் செயலாளர் நிஜாமுதின், மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம். யாகூப், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்பர்.
