மகாராட்டிரம் மாநிலம் நாசிக்கில் செயல்பட்டு வரும் இந்திய செக்யூரிட்டி பிரஸ், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்காக கடவுச்சீட்டுகள், விசா தொடர்பான ஸ்டிக்கர்கள், நீதித்துறை சாரா முத்திரைத்தாள்கள், நீதித்துறை முத்திரைகள், எம்அய்சிஆர் காசோலைகள், கலால் வரி ஒட்டும் லேபிள்கள், பல்கலைக்கழக பட்டச் சான்றிதழ்கள், விதைச் சான்றிதழ் குறிச்சொற்கள் போன்ற பல்வேறு பாதுகாப்புப் பொருள்களைத் தயாரித்து அச்சிடும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 534 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 19 ஆம் தேதிக்குள் இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த விபரம் வருமாறு:
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: CNPN/HR/Rect/01/2026
மொத்த காலியிடங்கள்: 534
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: மக்கள் நல அலுவலர் (Level A-2) – 2
பணி: பாதுகாப்பு அலுவலர் (Level P-2) – 1
ஊதியம்: மாதம் ரூ. 29,740 – ரூ.1,03.000
பணி: மேற்பார்வையாளர் (Technical – Control) (Level S-1) – 27
பணி: மேற்பார்வையாளர் (TO – Printing) (Level S-1) – 25
பணி: மேற்பார்வையாளர் (IT) (Level S-1) – 6
பணி: மேற்பார்வையாளர் (TO – Mechanical) (Level S-1) – 7
பணி: மேற்பார்வையாளர் (TO – AC) (Level S-1) – 3
பணி: மேற்பார்வையாளர் (TO – Electrical) (Level S-1) – 8
பணி: மேற்பார்வையாளர் (TO – Electronics) (Level S-1) – 9
பணி: மேற்பார்வையாளர் (Ink Factory) (Level S-1) – 3
பணி: மேற்பார்வையாளர் (Mechanical /Air Conditioning) (Level S-1) – 3
பணி: மேற்பார்வையாளர் (Electrical / Electronics) (Level S-1) – 3
பணி: மேற்பார்வையாளர் (TO – Civil) (Level S-1) – 3
பணி: மேற்பார்வையாளர் (TO – Instrumentation) (Level S-1) – 1
பணி: மேற்பார்வையாளர் (Official Language) (Level A-1) – 1
ஊதியம்: மாதம் ரூ. 27.600 – ரூ.95.910
பணி: செயலக உதவியாளர் (SA) (Level B-4) – 1
பணி: ஆர்ட்டிஸ்ட் (Graphic Design) (Level B-4) – 1
ஊதியம்: மாதம் ரூ.23,910 – ரூ.85,570
பணி: இளநிலை அலுவலக உதவியாளர் (Level B-3) – 22
ஊதியம்: மாதம் ரூ.21,540 – ரூ.77,160
பணி: இளநிலை தொழில்நுட்ப பணியாளர் (Printing) (Level W-3) – 108
பணி: இளநிலை தொழில்நுட்ப பணியாளர் (Control) (Level W-3) – 227
பணி: இளநிலை தொழில்நுட்ப பணியாளர் (Electrical) (Level W-3) – 12
பணி: இளநிலை தொழில்நுட்ப பணியாளர் (Electronics) (Level W-3) – 15
பணி: இளநிலை தொழில்நுட்ப பணியாளர் (Machinist) (Level W-3) – 08
பணி: இளநிலை தொழில்நுட்ப பணியாளர் (Fitter) (Level W-3) – 20
பணி: இளநிலை தொழில்நுட்ப பணியாளர் (Mechanic Machine Tool Maintenance / Fitter) (Level W-3) – 3
பணி: இளநிலை தொழில்நுட்ப பணியாளர் (Electronics/Instrumentation) (Level W-3) – 1
பணி: இளநிலை தொழில்நுட்ப பணியாளர் (Store) (Level W-3) – 2
பணி: இளநிலை தொழில்நுட்ப பணியாளர் (Air Conditioning) (Level W-3) – 2
பணி: இளநிலை தொழில்நுட்ப பணியாளர் (Ink Factory – Attendant Operator) (Level W-3) – 3
பணி: இளநிலை தொழில்நுட்ப பணியாளர் (Ink Factory- Laboratory Assistant) (Level W-3) – 3
பணி: இளநிலை தொழில்நுட்ப பணியாளர் (Mechanical/Air Conditioning) (Level W-3) – 2
பணி: இளநிலை தொழில்நுட்ப பணியாளர் (Electrical /Electronics) (Level W-3) – 2
ஊதியம்: மாதம் ரூ.18,780 – ரூ.67,390
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
பொதுவாக பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பிரிவில் அய்டிஅய் முடித்தவர்கள், ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள், ஆங்கிலம் அல்லது இந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பவர்கள், பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ, டிகிரி முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 19.5.2026 தேதியின்படி 18 முதல் 25, 38, 30-ற்குள் இருக்க வேண்டும்.
வயது வரம்பு சலுகை: உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இணைய வழி எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வில் பொது அறிவு, ஆங்கிலம், ரீசனிங் மற்றும் சம்மந்தப்பட்ட முக்கிய பாடப்பிரிவிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி, இடம் போன்ற விபரங்கள் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். எழுத்துத் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.1,000. இதர பிரிவினர்களுக்கு ரூ.200. கட்டணத்தை இணைய வழி மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.cnpnashik.spmcil.com என்ற இணையதம் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.5.2026
