ஒன்றிய அரசு வேலை.. 243 பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு

3 Min Read

தேசிய தகவலியல் மய்யத்தில் 243 சயின்டிஸ்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒன்றிய அரசு பணியாகும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.56 ஆயிரம் முதல் ரூ.1,77,500 வரை ஊதியம் வழங்கப்படும். இது குறித்த விவரங்கள்:

தேசிய தகவலியல் மய்யம் (NIC) என்பது ஒன்றிய அரசின் முக்கியமான தகவல் தொழில்நுட்ப (IT) அமைப்பாகும். 1976ஆம் ஆண்டு நிறுவப்பட்ட NIC, ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளின் நிர்வாகத்தை டிஜிட்டல் முறையில் மேம்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்டது. அரசுத் துறைகளுக்கு e-Governance சேவைகள் வழங்குதல், அரசு இணையதளங்கள், போர்டல்கள் உருவாக்குதல் மற்றும் பராமரித்தல் போன்ற பணிகளில் ஈடுபடுகிறது.

பணியிடங்கள் விவரம்

தற்போது தேசிய தகவல் மய்யத்தில் 243 சயின்டிஸ்ட்-பி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்கள் கேட் (GATE) மதிப்பெண் அட்டை மூலம் நிரப்பப்படவுள்ளன.

கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் – 168 பணியிடங்கள், * மின்னணுவியல் மற்றும் தகவல்தொடர்புகள் – 25 பணியிடங்கள்,

தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு – 50 பணியிடங்கள்

கல்வித் தகுதி:

பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், கேட் (GATE) 2024, 2025 அல்லது 2026 ஆம் ஆண்டு மதிப்பெண் பெற்றிருப்பதும் கட்டாயமாகும்.

மாற்றுத் தகுதிகளாக, கணினி படிப்புகளுக்கான மின்னணுவியல் மற்றும் அங்கீகாரத் துறையின் பி-நிலை (B-level), இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியர்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு பொறியாளர்கள் பட்டதாரி நிறுவனத்தின் அசோசியேட் உறுப்பினர் தகுதியும் ஏற்கப்படும்.

இத்துடன், அறிவியல் முதுகலைப் பட்டம் (MSc), கணினி பயன்பாட்டில் முதுகலைப் பட்டம் (MCA), பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் (ME / M.Tech), அல்லது தத்துவத்தில் முதுகலைப் பட்டம் (M Phil) பெற்றவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். இந்த தகுதிகள் அனைத்தும் மேலே குறிப்பிடப்பட்ட மூன்று சயின்டிஸ்ட்-பி பிரிவுகளுக்கும் பொதுவானதாகும்.

வயது வரம்பு:

30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு மார்ச் 31, 2026 நிலவரப்படி கணக்கிடப்படும்.

பட்டியல் ஜாதி (SC/ST) மற்றும் பழங்குடியினருக்கு (ST) 5 ஆண்டுகள், மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC – NCL) 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் எவ்வளவு?

ஊதியத்தை பொறுத்தவரை தேர்ந்தெடுக்கப்படுபவர் களுக்கு லெவல் 10 ஊதிய விகிதத்தின்படி மாத ஊதயமாக ₹56,100 முதல் ₹1,77,500 வரை வழங்கப்படும்.

தேர்வு முறை

தேர்வு முறையை பொறுத்தவரை, கேட் (GATE) 2024, 2025 அல்லது 2026 ஆம் ஆண்டு மதிப்பெண்கள் அடிப்படையிலும், அதைத் தொடர்ந்து நடைபெறும் தனிப்பட்ட நேர்காணல் (Personal Interaction/Interview) அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கான ஹால் டிக்கெட்டுகள் தனிப்பட்ட நேர்காணல் தேதிக்கு 4 முதல் 7 நாட்களுக்கு முன்னர் மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் இணையதளம் வாயிலாக செலுத்தப்பட வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், பட்டியல் சாதி (SC), பழங்குடியினர் (ST) மற்றும் மாற்றுத்திறனாளி (PWD) விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ₹800 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேசிய தகவலியல் மய்யத்தின் https://recruitment.nic.in/ என்ற இணையதளத்தின் ‘Careers’ பக்கத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கவனமாகப் பின்பற்றுவது அவசியம்.

ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், தேசிய தகவலியல் மய்யத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://recruitment.nic.in/ வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு மார்ச் 27, 2026 அன்று தொடங்கி ஏப்ரல் 24, 2026 அன்று முடிவடைகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *