சென்னை, மே 13 2026 ஆம் ஆண்டிற் கான நீட் (NEET) தேர்வில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பட்ட வினாத்தாள் கசிவு காரணமாக, நாடு முழுவதும் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையின் (NTA) இந்தத் தொடர் அலட்சியப் போக்கைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாண வர் சங்கம் ஆகியவை கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்க: வாலிபர் சங்கம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வராஜ் மற்றும் மாநிலச் செயலாளர் எஸ். கார்த்திக் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், நீட் தேர்வு என்பது ஆண்டு தோறும் மாணவர்களின் மன அழுத்தத்தையும் சமூக அநீதியையும் அதிகரித்து வருவ தாகக் குறிப்பிட்டுள்ளனர். தரமான கல்வி என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இந்தத் தேர்வு, இன்று தனியார் பயிற்சி மய்யங்களின் லாபத்திற்கும் கல்வியின் வணிகமயத் திற்கும் கருவியாக மாறியுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாகவே வினாத் தாள் கசிவு, ஆள்மாறாட்டம் மற்றும் மதிப்பெண் முறைகேடுகள் தொடர்ந்து அரங்கேறி வருவது மாணவர்களிடையே நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, ராஜஸ்தான் போன்ற பகுதி களில் பயிற்சி மய்யங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சூழலில், இத்தகைய குளறுபடிகள் மாணவர்களின் எதிர்காலத் துடன் விளையாடும் செயலாகும். நீட் தேர்வு முகமையின் அலட்சியமே இதற்குக் காரணம் என்றும், இதற்கு ஒன்றிய அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மாநில உரிமையை யும் சமூக நீதியையும் பாதுகாக்கும் வகையில் நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
முகமையைக் கலைக்க வேண்டும்: மாணவர் சங்கம்
இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி. மிருதுளா மற்றும் மாநிலச் செயலாளர் தௌ. சம்சீர் அகமது ஆகியோர் விடுத்துள்ள செய்தியில், மருத்துவ மாணவர் சேர்க்கையைத் தீர்மானிக்கும் நீட் தேர்வு முறையை ரத்து செய்வதுடன், தொடர் தோல்வி களைச் சந்தித்து வரும் என்டிஏ அமைப்பை உடனடியாகக் கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 2024 இல் ஏற்பட்ட கிரேஸ் மார்க் சர்ச்சை முதல் தற்போது 2026 இல் ஏற்பட்டுள்ள வினாத்தாள் கசிவு வரை, இத்தேர்வு முறையின் நம்பகத்தன்மை முழுமையாகச் சிதைந்துவிட்டதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நீட் என்பது வெறும் நுழைவுத்தேர்வு மட்டுமல்ல; அது மாநில உரிமை மற்றும் கல்வி சமத்துவத்திற்கு எதிரான கருவி யாக உள்ளது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து பயிற்சி பெறும் வசதி படைத்த வர்களுக்குச் சாதகமாகவே இந்த முறை செயல்படுகிறது. கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் காக்க இந்திய மாணவர் சங்கம் முன்னெ டுத்த போராட்டங்களின் விளைவாகவே 7.5% உள் ஒதுக்கீடு சாத்தியமானது என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
எனவே, நீட் மற்றும் கியூட் (CUET) போன்ற தேர்வுகளை ரத்து செய்து விட்டு, மாணவர் சேர்க்கை அதிகாரத்தை மீண்டும் மாநில அரசுகளுக்கே வழங்க வேண்டும் என்றும், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நீதித்துறை கண்கா ணிப்பில் விசாரணை நடத்தி முறை கேட்டில் ஈடுபட்ட ‘கோச்சிங் மாஃபி யாக்கள்’ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.
