‘‘தங்கம் வாங்க வேண்டாம்” பிரதமர் மோடியின் கோரிக்கைக்கு நகை வணிகர்கள் கடும் எதிர்ப்பு உ.பி.யில் கடையடைப்புப் போராட்டம்

லக்னோ, மே 12 நாடு முழுவதும் நிலவி வரும் பொருளாதார சூழல்களுக்கு மத்தியில், தங்கம் வாங்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கை நகை வியாபாரிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் நகை வணிகர்கள் இன்று (12.5.2026) அடையாள கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடி கோரிக்கை

மக்கள் அனைவரும் “அடுத்த ஓராண்டு காலத்திற்கு தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்” என பிரதமர் மோடி அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தார். நாட்டின் பொருளாதார நலன் மற்றும் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியானதாகக் கருதப்பட்டாலும், இது நேரடியாக நகைத் தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என வணிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட வணிகர் சங்கப் பிரதிநிதிகள் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

பொருளாதார மந்தநிலை: ஏற்கனவே நிலவி வரும் பொரு ளாதார மந்தநிலை காரணமாக நகை விற்பனை மந்தமாக உள்ளது. மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கே செலவிடத் தயங்கும் நிலையில், இத்தொழில் கடும் சரிவைச் சந்தித் துள்ளது.

வாழ்வாதாரப் பாதிப்பு: பிரதமரின் இத்தகைய வெளிப் படையான கோரிக்கை, நகை வாங் கத் திட்டமிட்டுள்ள மக்களிடையே தயக்கத்தை ஏற்படுத்தும். இது எங்களை மேலும் நலிவடையச் செய்யும்.

கோரிக்கை: நகைத் தொழிலைப் பாதுகாக்க அரசு மாற்று நட வடிக்கைகளை எடுக்க வேண்டுமே தவிர, விற்பனையைக் குறைக்கும் வகையில் பேசுவது முறையல்ல.

லக்னோவின் முக்கிய நகை விற்பனை மய்யங்களான அமீனா பாத், சவுக் மற்றும் ஹசரத்கஞ்ச் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து நகைக்கடைகளும் இன்று (12.5.2026) அடைக்கப்பட்டிருந்தன. பல்லாயிரக்கணக்கான ஊழியர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தங்கத்தின் மீதான வரி விதிப்பு மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகளால் ஏற்ெகனவே தவித்து வரும் தங் களுக்கு, பிரதமரின் இந்த அறிவிப்பு “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்” உள்ளதாக நகை வணிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஒரு கோடி தொழிலாளர் நேரடியாகவும் சுமார் 2 கோடி பேர் மறைமுகமாகவும் பாதிக்கப்படு வார்கள் என்று All India Gems and Jewellery Domestic Council ஆல் இந்தியா ஜெம்ஸ் அண்ட் ஜுவல்லரி டொமஸ்டிக் கவுன்சில் மற்றும் ஆக்ஸ்காம் அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *