தமிழ்நாட்டின் கடன் நிர்ணயிக்கப்பட்ட அளவில்தான் உள்ளது! விஜய்க்கு தொல்.திருமாவளவன் விளக்கம்!

புதுடில்லி, மே 12- விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் நீண்ட காலமாக அரசு விழாக்களில் தமிழ்மொழி வாழ்த்து முதலில் இசைக்கப்படும். அரசு விழாக்களில் வந்தே மாதரம் முதலில் பாட ஒன்றிய அரசு தெரிவித்து இருந்தாலும் தமிழ்நாடு அரசு மறுத்துள்ளது.
வந்தே மாதரம் பாடல் மதம் சார்ந்த கருத்தைக் கொண்டிருப்பதாக ஒரு சர்ச்சை இருக்கிறது. பாடல் விவகாரத்தில் அதிகாரிகளின் கவனக்குறைவா, ஆளுநரின் விருப்பமா எனத் தெரியவில்லை.
இதற்குரிய விளக்கத்தை விஜய் அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். பாஜக, அதிமுக ஆதரவை நாடாமல் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை விஜய் கோரினார்.
மதசார்பற்ற அரசை நிறுவுவது நோக்கம் என தவெக தரப்பில் சொல்லப்பட்டதால் ஆதரவு அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் கடன் வரம்புக்குள்தான் உள்ளது. விஜய்க்கு நெருக்கடி தர விரும்பவில்லை. பெரும்பான்மை கோரும் போது தவெகவை ஆதரிப்போம்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *