சென்னை, மே 11 17 ஆவது சட்ட மன்றத்தின் முதல் கூட்டம் இன்று (11.5.2026) காலை 9.30 மணிக்குத் தொடங்கியது; புதிய உறுப்பினர்களுக்குத் தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை பிடித்த தமிழக வெற்றிக் கழகம், சில கட்சிகள் அளித்த ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல மைச்சராக அக்கட்சியின் தலைவர் ச.ஜோசப் விஜய் நேற்று (10.5.2026) பதவியேற்றார். அவருடன் ஒன்பது அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். தற்காலிக பேரவைத் தலைவராக, சோழ வந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா தேர்வு செய்யப்பட்டார். கருப்பையாவுக்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தற்காலிக
பேரவைத் தலைவர்
இந்நிலையில், தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா தலைமையில் சட்டமன்றம் இன்று (மே 11) காலை 9.30 மணிக்குக் கூடியது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனை வருக்கும், தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலாவதாக பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் பதவியேற்றார். தொடர்ந்து ஒவ்வொரு உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டனர்.
எதிர்க்ட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரும், பிற கட்சியினரும் பதவியேற்றுக் கொண்டனர்.
ஆளுநர் அர்லேகர்
கொடுத்த கெடுவிற்குள்…
நாளை பேரவைத் தலைவர் தேர்தல் நடக்க உள்ளது. அப்போது பேரவைத் தலைவர், துணை பேரவைத் தலைவர் ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள். இதன் பிறகு ஆளுநர் அர்லேகர் கொடுத்த கெடுவிற்குள், சட்டமன்றத்தில், தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான புதிய அரசிற்குப் பெரும்பான்மை இருப்பதை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நிரூபிக்க வேண்டும்.
இதற்கிடையே தலைமைச் செயல கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பி னர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
