ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிறுத்தம் செய்வதா? கேரள அரசுக்கு சி.அய்.டியூ. கண்டனம்

1 Min Read

திருவனந்தபுரம்,மே 10 ஆட்சி மாற்றம் என்ற பெயரில் தொழிலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்திய தொழிற்சங்க மய்யம் (சிஅய்டியு) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிஅய்டியு பொதுச் செயலாளர் எளமரம் கரீம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடும்ப சிறீ உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் பல ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருபவர்களை, அய்க்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) அமைப்புகளின் தூண்டுதலின் பேரில் பணிநீக்கம் செய்யவும், அவர்களின் ஊதியத்தை நிறுத்தி வைக்கவும் மேற்கொள்ளப் படும் முயற்சி ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை

யுடிஎப் ஆதரவு அமைப்பு ஒன்றின் கடிதத்தின் அடிப் படையில் அரசு ஊழியர்கள் மொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டனர். பாரதிய மெடிகோஸ் துறையில் உள்ள ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் சிகிச்சையாளர்களின் பணி, ஒப்பந்தக் காலம் முடிந்த பின்னரும் புதுப்பிக்கப்பட வில்லை. குடும்பசிறீ திட்டத்தில் உள்ள 2,624 ஊழியர்களின் நியம னங்களை சட்டப்படி புதுப்பிக்க வேண்டும் எனத் துறைத் தலைவர்கள் பரிந்துரைத்த போதிலும், நிர்வாகம் அதைத் தடுத்தது. மிகச் சமீபத்தில், கே டெஸ்க் பிரிவில் உள்ள ஒரு பிரிவு ஊழியர்களின் ஊதியமும் நிறுத்தி வைக்கப்பட்டது.

தொடர்புடைய திட்டங்களின் விதிகளின்படி, ஒப்பந்த முறையின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமனங்கள் புதுப்பிக்கப்படு கின்றன. ஒப்பந்தங்களை உரிய நேரத்தில் புதுப்பிக்க வேண்டும் என்ற பரிந்துரையை உயர்நீதி மன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. நிரந்தரமானதாக இருந்தாலும் சரி, ஒப்பந்த அடிப்படையிலானதாக இருந்தாலும் சரி பணிபுரியும் உரிமை அரசியலமைப்புக்கு உட்பட்டது. இவை அனைத்தும் அரசியல் உள்நோக்கத்துடன் கையாளப்பட்டால், அதற்குப் பெரும் விலையைக் கொடுக்க வேண்டி யிருக்கும். பணி நியமனங்கள் புதுப்பிக்கப்படாத குடும்ப சிறீ பணியாளர்கள், சிஅய்டியு-வின் ஆதரவுடன் விரைவில் மாவட்ட அலுவலகங்கள் முன்பாக போராட் டத்தைத் தொடங்குவார்கள்” என அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *